சண்டையிலும் இந்திய வீரர்ரை பாராட்டிய சாஹித் அப்ரிடி!
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டிகள் கொண்ட ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கிறது. தர்மசாலாவில் நடக்க இருந்த முதல் போட்டி கனமழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டி மொகாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.
தென் ஆப்ரிக்க அணிக்கு ரீஜா ஹென்டிரிக்ஸ், கேப்டன் குயின்டன் டி காக் ஜோடி துவக்கம் தந்தது. வாஷிங்டன் சுந்தர் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்து தனது ரன் கணக்கை துவக்கிய குயின்டன், நவ்தீப் சைனி வீசிய 3வது ஓவரில் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி விளாசினார். முதல் விக்கெட்டுக்கு 31 ரன் சேர்த்த போது தீபக் சகார் ‘வேகத்தில்’ ஹென்டிரிக்ஸ் (6) வெளியேறினார்.
ஹர்திக் பாண்ட்யா வீசிய 8வது ஓவரில் ஒரு சிக்சர் பறக்கவிட்ட டெம்பா பவுமா, பாண்ட்யா வீசிய 10வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி விரட்டினார். மறுமுனையில் அபாரமாக ஆடிய குயின்டன், ரவிந்திர ஜடேஜா பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 57 ரன் சேர்த்த போது சைனி பந்தில் குயின்டன் (52) அவுட்டானார்.
தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில், 5 விக்கெட்டுக்கு 149 ரன்கள் எடுத்தது. பிரிட்டோரியஸ் (10), பெலுக்வாயோ (8) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் தீபக் சகார் 2, சைனி, ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி துவக்கம் தந்தது. நார்ட்ஜே வீசிய 2வது ஓவரில், 2 சிக்சர் விளாசிய ரோகித் (12), பெலுக்வாயோ பந்தில் அவுட்டானார். பொறுப்பாக ஆடிய தவான், ரபாடா வீசிய 3வது ஓவரில், தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார். அடுத்து வந்த கேப்டன் கோஹ்லி, பிரிட்டோரிஸ், பெலுக்வாயோ பந்தில் தலா ஒரு பவுண்டரி விரட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 61 ரன் சேர்த்த போது ஷாம்சி பந்தில் தவான் (40) அவுட்டானார். ரிஷாப் பன்ட் (4) ஏமாற்றினார். பெலுக்வாயோ பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கோஹ்லி, 22வது அரைசதமடித்தார். தொடர்ந்து அசத்திய இவர், ரபாடா, பார்டுயின் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். பார்டுயின் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஸ்ரேயாஸ் ஐயர் வெற்றியை உறுதி செய்தார்.
இந்திய அணி 19 ஓவரில், 3 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கோஹ்லி (72), ஸ்ரேயாஸ் (16) அவுட்டாகாமல் இருந்தனர்
Congratulations @imVkohli You are a great player indeed, wish you continued success, keep entertaining cricket fans all around the world. https://t.co/OoDmlEECcu
— Shahid Afridi (@SAfridiOfficial) September 18, 2019
இந்நிலையில் அப்ரிடி சுயசரிதையான கேம் சேஞ்சரை சமீபத்தில் வெளியிட்டார். அதில், இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பிரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அப்ரிடி அதில், ‘களத்தில் சில சண்டைகள் தனிப்பட்டதாகவும், சில சண்டைகள் விளையாட்டு ரீதியாகவும் இருக்கும். அதில் காம்பிர் வெறும் சவுண்டு பார்ட்டி தான், அவரிடம் பெரிய சாதனை எதுவும் இல்லை. அவரின் செயல்பாடு டான் பிராட்மேன் மற்றும் ஜேம்ஸ் பாண்ட் கிராஸ் போல நடந்து கொள்வார்.