சூதாட்டப் புகாரில் சிக்கி ஓராண்டு உடனடித் தடையையும் இன்னுமொரு ஆண்டு இடைநிறுத்தத் தண்டனையையும் அனுபவித்து வரும் வங்கதேச டெஸ்ட் மற்றும் டி20 முன்னாள் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட்டிலிருந்து சற்றே கவனத்தைத் திருப்பி கால்பந்தாட்டம் பக்கம் சென்றுள்ளார்.
சூதாட்டம் தொடர்பாக புக்கி ஒருவர் தன்னைத் தொடர்பு கொண்டதை ஐசிசி சூதாட்ட தடுப்பு அமைப்பிடமோ, வங்கதேச கிரிக்கெட் நிர்வாகிகளிடமோ முறைப்படித் தெரிவிக்காமல் இருந்ததற்காக ஷாகிப் அல் ஹசன் தண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவர் “ஃபுட்டி ஹேக்ஸ்” என்ற உள்நாட்டு அணிக்காகக் கால்பந்தாட்டம் ஒன்றில் ஆடினார். கொரியன் எக்ஸ்பாட் என்ற அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் ஷாகிபின் ஃபுட்டி ஹேக்ஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதனை அந்த அணி தங்கள் முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, “ஷாகிப் அல் ஹசன் மீண்டும் ஃபுட்டி ஹேக்ஸ் அணிக்கு திரும்பியதில் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளது.
ஷாகிப் தடை அக்டோபர் 29, 2020-ல் முடிவடைகிறது, இதனால் உலகக்கோப்பை டி20-யிலும் ஷாகிப் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கதேசத்தில் ஷகிப் அல் ஹசனின் சொந்த ஊர் மற்றும் தலைநகர் தாகாவில் அவருக்கு ஆதரவாக மக்கள் திரண்டு போராட்டம் நடத்தினர். அதனால், பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஜனவரி 2018இல் தொடங்கி ஏப்ரல் 2018 வரை வங்கதேச அணி ஆடிய முத்தரப்பு தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் அணியின் உள் விவரங்கள் அல்லது மேட்ச் பிக்ஸிங் செய்யும் நோக்கத்துடன் ஒருவர் ஷகிப்பை தொடர்பு கொண்டுள்ளார்.
அவரிடம் பணம் பெறாத போதும், அவருக்கு எந்த வகையிலும் தகவல் அளிக்காத போதும், விதிப்படி ஐசிசியிடம் ஷகிப் அல் ஹசன் புகார் தெரிவிக்கவில்லை. அதனால், ஐசிசி அவருக்கு இரண்டு ஆண்டுகள் முன் தேதி இட்டு தடை விதித்தது.
அதனால், இந்தியா – வங்கதேச தொடரில் ஷகிப் ஆட முடியாத நிலை ஏற்படுள்ளது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் 2020 டி20 உலகக்கோப்பை தொடரிலும் அவரால் பங்கேற்க முடியாது.
ஸ்ட்ரைக்கை ஒட்டி நடந்த சம்பவங்கள் மற்றும் ஐசிசி தடை இரண்டும் வேறு வேறு என்றாலும், வங்கதேச ரசிகர்கள் சில நாட்களில் நடந்த சர்ச்சைக்குரிய இந்த சம்பவங்களால் அதிர்ந்து போய் உள்ளனர்.
வங்கதேச ரசிகர்கள் சுமார் 700 பேர் ஷகிப் அல் ஹசனின் சொந்த ஊரான மகுராவில் திரண்டு ஐசிசி உடனடியாக தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அந்தப் போராட்டத்தில் ஷகிப் சதிகளுக்கு பலியாகி விட்டார் என்ற பதாகை ஏந்தி சென்றனர் ரசிகர்கள்.

தலைநகர் தாகாவில் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். எனினும், அந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. அதே போல, இணையதளத்தில் வங்கதேச ரசிகர்கள் கடும் கோபமாக பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.வ்