ஷாகிப் அல் ஹசன் இல்லாதது இரண்டு வீரர்களை இழந்ததற்கு சமம் என வங்காளதேச அணி கேப்டன் மொமினுல் ஹக்யூ தெரிவித்துள்ளார்.
இந்தியா – வங்காளதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. வங்காளதேச அணியில் ஷாகிப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் கிடையாது. இருவரும் அணியில் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும்.
ஷாகிப் ஹசன் இல்லாததால் மொமினுல் ஹக்யூ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். நாளைய முதல் டெஸ்ட் குறித்து மொமினுல் ஹக்யூ கூறுகையில் ‘‘மூன்று வீரர்களை இழப்பதாக நான் நினைக்கிறேன். ஏனென்றால் ஷாகிப் அல் ஹசன் இரண்டு வீரர்களுக்கு சமமானவர். அவர் இல்லாதது சவாலானதாக இருக்கும். இருந்தாலும், அதைப்பற்றி மிகப்பெரிய அளவில் சிந்திக்க வேண்டியதில்லை’’ என்றார்.

இந்தியா – பங்களாதேஷ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து பங்களாதேஷ் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான, 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது. அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்த மைதானத்தில் இதற்கு முன்பு நடந்த ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, நியூசிலாந்தை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.