தோனி, கோலி, ரோஹித் சர்மா செய்யாததை செய்து அசத்திய முகமது ஷமி! வேடிக்கை மட்டும் பார்க்கும் நட்சத்திர வீரர்கள் 1

உத்தரப் பிரதேசத்தின் தேசிய நெடுஞ்சாலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமட் ஷமி புலம்பெயரும் தொழிலாளர்களுக்கு உணவுப் பொட்டலங்களையும் முகக்கவசங்களையும் வழங்கி சமூக சேவையில் இறங்கினார்.

மேலும் சஹஸ்பூரில் தன் இல்லத்தருகிலேயே உணவு விநியோக மையத்தையும் திறந்துள்ளார் ஷமி.

பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் கிரிக்கெட் வீரர் மொகமட் ஷமி, முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து சொந்த ஊருக்குப் போகும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தானே முகக்கவசம் உணவுப்பொட்டலங்களை வழங்கினார்.தோனி, கோலி, ரோஹித் சர்மா செய்யாததை செய்து அசத்திய முகமது ஷமி! வேடிக்கை மட்டும் பார்க்கும் நட்சத்திர வீரர்கள் 2

முன்னதாக சவுரவ் கங்குலி 2000 கிலோ அரிசியை ஏழைகளின் உணவுக்காக வழங்கினார். விளையாட்டு வீரர்கள் பலரும் தங்களால் முடிந்த அளவுக்கு பெரிய அளவில் ஏழைகளுக்கு உதவி புரிந்து வருகின்றனர்.

 

பல நூறு கோடிகள் சம்பாதிக்கும் மகேந்திரசிங் தோனி விராட், கோலி ரோகித் சர்மா போன்றோர் மாட மாளிகைகளில் தங்களது குடும்பத்துடன் ஜாலியாக இருக்கும் வேலையில் அவ்வளவு பிரபலம் இல்லாத இவர்களைப் போல் சம்பாதிக்காத முகமது சமி களத்தில் இறங்கி நேரடியாக மக்களுக்கு உதவி செய்து வருவது பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது.

ஏற்கனவே விராட் கோலி குழந்தைகளுக்கு காப்பகம் நடத்தி வந்தது இந்த நேரத்தில் இக்கட்டான சூழ்நிலைகளில் மக்களிடம் தங்களை எவ்வாறு காட்டிக்கொள்கிறார்கள் என்பது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சமூக வலைதளங்களில் சம உரிமை பேசும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்றோர் இதற்கெல்லாம் செவிசாய்க்க கூட இல்லை.தோனி, கோலி, ரோஹித் சர்மா செய்யாததை செய்து அசத்திய முகமது ஷமி! வேடிக்கை மட்டும் பார்க்கும் நட்சத்திர வீரர்கள் 3

வட இந்திய மக்கள் தென்னிந்தியாவிற்கு வந்து விட்டு கிட்டதட்ட 2000 கிலோ மீட்டர் நடந்தே பயணித்து தங்களது உயிரையும் இழக்கின்றனர். பல பிரபலமானவர்கள் இவர்களுக்கு உதவி வந்தாலும் இந்திய மக்களுக்கு அதிகம் பரிட்சயப்பட்ட விராட் கோலியும் மற்றும் ரோஹித் சர்மாவும் போன்றோர் இதனை செவிசாய்த்தார்கலா என்பது கூட தற்போது வரை தெரியவில்லை. தோனியும் இதற்கு விதிவிலக்கல்ல.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *