இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக மாற வேண்டும் என்று பாலிவுட்
பிரபலம் ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வரும் கேப்டன் மிதாலி ராஜ், இந்தியாவில் அதிகம் பேசப்படும் நபராக மாறி வருகிறார். 35 வயதாகும்
இவர், பெண்கள் கிரிக்கெட்டில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீராங்கனை ஆவர்.
சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி
ஒன்றில் பங்கேற்ற பாலிவுட் ஸ்டார் ஷாரூக் கான் மிதாலியிடம் பல கேள்விகளை கேட்டார். அப்போது பேசிய அவர், மிதாலியை ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக பார்க்க வேண்டும் என்று கூறினார்.
இதற்கு மிதாலியின் பதில் என்னவாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
.@iamsrk wants to see @M_Raj03 as the coach of the men’s cricket team one day! @M_Raj03, even we can't wait for it! 😉 pic.twitter.com/LPOUVZXWxz
— Delhi Times (@DelhiTimesTweet) January 2, 2018
அதன் பின்பு, ஷாரூக்கானுக்கு பதில் அளித்த மிதாலி, “நான்
எப்போதும் என்னுடைய சிறந்ததை தர விரும்புகிறேன்” என்றார். தொடர்ந்து பேசிய மிதாலி, கிரிக்கெட் போட்டியின் போது புத்தகம் படிக்கும்
ரகசியத்தை பற்றியும் கூறினார்.

கிரிக்கெட் போட்டியின் போது புத்தகம் படிப்பதால், கவனம் சிதறாமல் தொடர்ந்து ஆட்டத்தில் கவனம் செலுத்த
முடிகிறது என்றும், களத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த புத்தகங்கள் உதவுகிறது என்றும் மிதாலி தெரிவித்தார்