ஆல் ரவுண்டர் காயம்: மாற்று வீரராக ஷிகர் தவான் அழைப்பு 1

விஜய் சங்கர் காயம் அடைத்துள்ளதால் அவருக்குப் பதிலாக ஷிகர் தவான் இந்திய ஏ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க ஏ அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து அதிகாரபூர்வமற்ற 5 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடுகிறது. இதன் முதல் 3 ஒரு நாள் போட்டிகளுக்கு மணீஷ் பாண்டே கேப்டனாகவும் அடுத்த இரண்டு போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும் நியக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போட்டியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் விஜய சங்கர், பெரு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகியுள்ளார். இதையடுத்து, சரியான ஃபார்மில் இல்லாத ஷிகர் தவான், கடைசி இரண்டு போட்டிகளுக்கான இந்திய ஏ அணியில் சேர்க்கப் பட்டுள்ளார்.

ஆல் ரவுண்டர் காயம்: மாற்று வீரராக ஷிகர் தவான் அழைப்பு 2
India’s Vijay Shankar attends a training session at The Oval in London, Friday, May 24, 2019. The Cricket World Cup starts on Thursday May 30. (AP Photo/Aijaz Rahi)

இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய ஏ அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது.

இந்தியா ‘ஏ’ – தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. திருவனந்தபுரத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி இந்தியா ‘ஏ’ அணியின் ஷுப்மான் கில், கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். கெய்க்வாட் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தார். ஷுப்மான் கில் 46 ரன்னில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

ஆல் ரவுண்டர் காயம்: மாற்று வீரராக ஷிகர் தவான் அழைப்பு 3
LONDON, ENGLAND – JUNE 08: Shikhar Dhawan of India reacts to the crowd as he leaves the field after being dismissed during the ICC Champions trophy cricket match between India and Sri Lanka at The Oval in London on June 8, 2017 (Photo by Clive Rose/Getty Images)

அடுத்து வந்த அன்மோல்ப்ரீத் (29), மணிஷ் பாண்டே (39), இஷான் கிஷன் (37) சீரான இடைவெளியில் வெளியேறினர். அடுத்து வந்த ஷிவம் டுபே ஆட்டமிழக்காமல் 60 பந்தில் 79 ரன்களும், அக்சார் பட்டேல் 36 பந்தில் 60 ரன்களும் அடிக்க இந்தியா ‘ஏ’ நிர்ணயிக்கப்பட்ட 47 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் குவித்தது.

பின்னர் 47 ஓவரில் 328 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் ஹென்ரிக்ஸ் சிறப்பாக விளையாடி 108 பந்தில் 110 ரன்கள் சேர்த்தார்.ஆல் ரவுண்டர் காயம்: மாற்று வீரராக ஷிகர் தவான் அழைப்பு 4

ஆனால் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் கிளாசன் 43 பந்தில் 58 ரன்கள் அடித்தாலும், கடைசி ஐந்து வீரர்கள் சரியாக ரன்கள் குவிக்க இயலாமல் போனதால் 45 ஓவரில் 258 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது தென்ஆப்பிரிக்கா ‘ஏ’. இதனால் இந்தியா ‘ஏ’ அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *