எனது தாய் நலம் : சிகர் ட்விட்டரில் பதிவு
தனது தாயின் உடல் நலக்குறைவால், இலங்கை உடனான 5ஆவது ஒருநாள் போட்டியில் கலந்து கொள்ள இயலாமல் தனது தாய்க்கு உதவ இந்தியா திரும்பினார் சிகர் தவான். தற்போது எனது தாய் நலமாக உள்ளார் என தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சிகர் தவான்.
இலங்கை சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனக்கே உரித்தான பாணியில் அதிரடியாக ஆடி 3 சதங்களை விளாசினார் சிகர் தவான்.
Mom is recovering… Her health is much better than before. Thank you every1 fr your support ???? pic.twitter.com/SasYjC8ftB
— Shikhar Dhawan (@SDhawan25) September 4, 2017
5ஆவது ஒருநாள் போட்டு துவங்கும் இரு தினங்களுக்கு முன் தனது தாய்க்கு உடல் நிலை சரியில்லை என இந்தியா திரும்பினார் தவான்.
மேலும், அவர் இலங்கை உடனான அந்த ஒரு டி20 போட்டியிலும் கலந்து கொள்ள மாட்டார் என பி.சி.சி.ஐ தரப்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும், அவருக்கான மாற்று வீரரும் அறிவிக்கப்படவில்லை. இதன் காரணமாக ஒருநாள் போட்டியில் பங்கு பெற முடியாமல் தவித்து வந்த அஜிங்க்யா ரகானேவிற்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
http://tamil.sportzwiki.com/hardik-pandya-gives-a-flirty-reply-to-parineeti-chopras-tweet/
இலங்கை உடனான ஒரே ஒரு டி20 போட்டியிலும் அஜிங்க்யா ரகானே தான் தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கபடுகிறது.
இலங்கை உடனான ஒரே ஒரு டி20 போட்டி நாளை கொலும்புவில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இலங்கை அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.