10 வருடங்களுக்கு முன்னர் பாகிஸ்தானின் சோயப் அக்தர் என்றாலே கால் நடுங்கிய பல பேட்ஸ்மேன்கள் உண்டு. உலகிலேயே அதிவேகமான பந்து வீச்சியவர் சோயப் அக்தர் தான். சுழபமாக எப்போதும் மணிக்கு 145 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுபவர் சோயப் அக்தர்.
1997ல் தனது அறிமுகப்போட்டியில் விளையாடினார் அக்தர். அப்போதிலிருந்து வேகத்திற்கு பெயர் பெற்றவர் அக்தர் தான். தனது கிரிக்கெட் வாழக்கையில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இரண்டு முறை வீசியுள்ளார். இதனைச் செய்த உலகின் ஒரே ஒரு பந்து வீச்சார் அக்தர் மட்டுமே.
அப்போது இருந்து மிகக்சிறந்த பேட்டிங்க் வரிசையை எல்லாம் கதி கலங்கச் செய்திருக்கிறார். உலகிலேயே மிக அதிகவேகமாக பந்து வீசியவர் என்ற பெருமைய 2003 உலகக்கோப்பையின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக மணிக்கு 161.3 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி பெற்றார்.
மேலும், முதன் முதலாக சச்சின் டெண்டுகருக்கு வீசிய பந்திலயே அவரை க்லீன் போல்டு ஆக்கி அவரையும் மிரள வைத்தார். எப்படியும் அவர் மீது உள்ளூர் போட்டிகளின் போது ஊக்க மருந்து உட்கொண்டதாக நடவடிக்கை எடுக்கப்பட்டதை மறுக்க இயலாது.
கோலியின் பிறந்த நாளான இன்று அவர் கோலிக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் ஒரு சிறு வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். அக்தர் பதிவிட்ட ட்வீட்டில் கூறியதாவது,
கோலிக்கு பந்து வீச முடியாதது சற்று வருத்தமாக தானுள்ளது. ஆனால், பந்து வீசியிருந்தால் அது ஒரு நல்ல போட்டியாக அமைந்திருக்கும்.
என ட்வீட் செய்திருந்தார் அக்தர்.
மேலும், இந்தியக் கேப்டன் கோலியின் அக்தரைப் பற்றி முன்னர் ஒருமுறை கூறியுள்ளார்,
நல்ல வேலை அக்தர் பந்து வீசிய போது நான் இல்லை, அப்படி இருந்திருந்தால் நான்-ஸ்ட்ரைக்கில் இருந்து பார்ப்பதையே விரும்பியிருப்பேன்.
எனக் கூறியிடுந்தார் விராட் கோலி.
மேலும் ,இன்று பிறந்த நாள் கொண்டாடும் விராட் கோலியை பல்வேரு தரப்பினரும் வாழ்த்தி வருகின்றனர். சாதனை மேல், சாதனையாக படைத்து வரும் கோலிக்கு இன்றுடன் 29 வயதாகிறது.
தனது 19 வயதில் இந்தியாவின் அண்டர்19 அணிக்காக உலகக்கோப்பை வென்று கொடுத்ததில் இருந்து இந்திய அணிக்கும் அவருக்குமான சாதனைப் பந்தம் தொடர்கிறது.