பந்து வீச்சாளர்கள்தான் வெற்றிக்கு காரணம் : கேப்டன் ஸ்ரேயஸ் 1
ஐ.பி.எல். போட்டியின் 32-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்க இருந்தது. இதில் ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.பந்து வீச்சாளர்கள்தான் வெற்றிக்கு காரணம் : கேப்டன் ஸ்ரேயஸ் 2
முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால், டெல்லியில் மழை பெய்து வருவதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. சுமார் 9 மணியளவில் மழை குறைந்தது. இதையடுத்து, மைதானத்தை சோதித்த நடுவர்கள் இரவு 9:30 மணியளவில் ஆட்டம் தொடங்கும் என அறிவித்தனர். மேலும் இந்த போட்டியில் 18 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக மாற்றப்பட்டது.
பந்து வீச்சாளர்கள்தான் வெற்றிக்கு காரணம் : கேப்டன் ஸ்ரேயஸ் 3
இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. டெல்லி அணி 17.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. டெல்லி அணியில் பிரித்வி ஷா 47 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 50 ரன்களும், ரிஷப் பாண்ட் 69 ரன்களும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி பந்துவீச்சில் உனத்கட் மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.
மழையின் காரணமாக மீண்டும் ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டது. ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 12 ஓவர்களில் 151 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷார்ட், ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். பட்லர் தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கினார். இதனால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. முதல் ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 14 ரன்கள் கிடைத்தது.
பந்து வீச்சாளர்கள்தான் வெற்றிக்கு காரணம் : கேப்டன் ஸ்ரேயஸ் 4
3-வது ஓவரை அவேஷ் கான் வீசினார். அந்த ஓவரில் பட்லர் மூன்று சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி உட்பட 23 ரன்கள் விளாசினார். இதனால் ராஜஸ்தான் அணி 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 45 ரன்கள் குவித்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய பட்லர் 18 பந்தில் அரைசதம் கடந்தார். இதில் 3 பவுண்டரிகளும், ஆறு சிக்ஸர்களும் அடங்கும். பட்லர் 26 பந்தில் 67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அமித் மிஷ்ரா பந்தில் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார்.
பந்து வீச்சாளர்கள்தான் வெற்றிக்கு காரணம் : கேப்டன் ஸ்ரேயஸ் 5
அதன்பின் சஞ்சு சாம்சன் இறங்கினார். ராஜஸ்தான் அணி 8 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் குவித்தது. அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 24 பந்தில் 59 ரன்கள் தேவைப்பட்டது. சாம்சன் 3 ரன்னிலும், அவரைத்தொடர்ந்து வந்த பென் ஸ்டோக்ஸ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 9 ஓவரில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்தது. 9-வது ஓவரை மேக்ஸ்வெல் வீசினார், அந்த ஓவரின் முதல் மூன்று பந்தையும் ஷார்ட் சிக்ஸராக மாற்றினார். ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த ஷார்ட் அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.
அதன்பின் ராகுல் திரிபாதி, கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 12 ஓவர்களுக்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணியில் போல்ட் 2 விக்கெட் வீழ்த்தினார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *