இந்திய அணிக்கு எதிராக நடக்கும் ஒருநாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிகள் டெஸ்ட் போட்டிக்கு என்று வளர்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் பீட்டர் சிடில், நேதன் லயன், உஸ்மான் கவாஜா என பல அதிர்ச்சியூட்டும் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதில் பீட்டர் சிடில் கடந்த 2010ஆம் ஆண்டு கடைசியாக ஒரு நாள் போட்டியில் விளையாடினார். அதுவும் அப்போது நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒரு போட்டியில் கூட ஆடவில்லை. அதிக நாட்களுக்கு பிறகு மீண்டும் ஒருநாள் போட்டிகளில் ஆடிய ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். இதற்கு முன்னர் டிம் ஜோர்ஹர் என்னும் ஆஸ்திரேலிய வீரர் ஆறு வருடங்கள் மற்றும் 282 நாட்கள் கழித்து மீண்டும் ஒரு நாள் போட்டியில் ஆடினார் தற்போதைய அந்த சாதனையை முறியடித்துள்ளார் சிடில்.
பிக்பாஸ் 20 ஓவர் லீக் தொடரில் ஆடிவரும் அவர் அணிக்காக அற்புதமாகப் பந்து வீசியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஒருநாள் போட்டி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி : ஆரோன் பின்ச், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேன்ட்கோம்ப், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னீஸ், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் காரே, ஜாய் ரிச்சர்ட்சன், பில்லி ஸ்டான்லேக், ஜேசன் பெஹரென்ற்றாப், பீட்டர் சிடில், நாதன் லியான், ஆடம் ஜாம்பா.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா 193 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இன்று இந்தியா தனது 2ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. நிதான ஆட்டத்தை வெளிப்படுததிய ஹனுமா விறாரி 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 2ஆம் நாள் ஆட்ட உணவு இடைவேளையின் போது இந்தியா 117 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 389 ரன்களை எடுத்திருந்தது. புஜாரா 181 ரன்களுடனும், பந்த் 27 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடந்து சிறப்பாக விளையாடிய புஜாரா 193 ரன்களில் ஆட்டமிழந்தார். 4ஆவது இரட்டை சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிபார்த்த நிலையில் லியான் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்திய அணி தற்போது வரை 6 விக்கெட் இழப்புக்கு 426 ரன்கள் எடுத்துள்ளது. பந்த் 50 ரன்களுடனும், ஜடேஜா 2 ரன்களுடனும் களத்தில் விளையாடி வருகின்றனர்.