Mohammed Siraj

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணியில் புதுமுக வீரர்களான ஸ்ரேயாஸ் அய்யர், முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் எம்.விஜய் மீண்டும் இடம் பெற்றுள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடர் முடிந்ததும், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது 20 ஓவர் போட்டி டெல்லியில் நவம்பர் 1-ந் தேதியும், 2-வது 20 ஓவர் போட்டி ராஜ்கோட்டில் நவம்பர் 4-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி திருவனந்தபுரத்தில் நவம்பர் 7-ந் தேதியும் நடக்கிறது.இந்த இடத்திற்கு வர காரணம் இவர் தான் , முகமது சிராஜ் உருக்கம் 1

இதனை அடுத்து இந்தியா- இலங்கை அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நவம்பர் 16-ந் தேதியும், 2-வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நவம்பர் 24-ந் தேதியும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் டிசம்பர் 2-ந் தேதியும் தொடங்குகிறது.

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடர் மற்றும் இலங்கைக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

Cricket, India A, South Africa A, Shreyas Iyer, Manish Pandey
Cricket, India A, South Africa A, Shreyas Iyer, Manish Pandey

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணியில் புதுமுக வீரர்களான மும்பையை சேர்ந்த 22 வயது பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், ஐதராபாத்தை சேர்ந்த 23 வயது வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.இந்த இடத்திற்கு வர காரணம் இவர் தான் , முகமது சிராஜ் உருக்கம் 2

இதற்கு காரணம் பலர் இருக்கின்றனர். எங்கள் ஹைதராபாத் அணி கோச் முதல் அனைவரும் நான் இந்நிலைக்கு வர உதவி இருக்கின்றனர். அண்டர்23 அணியில் மேலாரளராக இருந்த வினோத் என அனைவரும் எனக் உதவி இருக்கின்றனர். இனிமேல் எனது தந்தையை ரிக்ஸ்சா ஓட விட மாட்டேன்.

இதனைப் பற்றி அவர் கூறியதாவது

சான் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இருந்த என் சீனியர் புனேஸ்வர் குமாருக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன். அவர் இந்த நிலைக்கு என்னை கொண்ட வர நிறைய ஆலோசனைகள் கொடுத்துள்ளார்இந்த இடத்திற்கு வர காரணம் இவர் தான் , முகமது சிராஜ் உருக்கம் 3

என அவருக்கு நன்றி தெரிவித்தார் முகமது சிராஜ்.

கேதர் ஜாதவ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். நெஹரா அணியில் இடம் பிடித்துள்ளார். அவர் தனது சொந்த ஊரான டெல்லியில் நடைபெறும் முதல் 20 ஓவர் போட்டிக்கான அணிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த போட்டியுடன் அவர் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டி தொடருக்கான அணியில் மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை தொடரில் விளையாடாத தமிழக வீரர் எம்.விஜய் மீண்டும் இடம் பிடித்துள்ளார். அபினவ் முகுந்த் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடந்த தொடர்களில் ஓரம் கட்டப்பட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். 3-வது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் இடம் பிடித்து இருக்கிறார்.

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

விராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், டோனி, ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், நெஹரா.

இலங்கைக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

விராட்கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், எம்.விஜய், ஷிகர் தவான், புஜாரா, ரஹானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, விருத்திமான் சஹா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார், இஷாந்த் ஷர்மா.

அணி அறிவிப்புக்கு பிறகு இந்திய அணி தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இலங்கைக்கு எதிரான போட்டி தொடரில் கேப்டன் விராட்கோலிக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று வெளியான செய்திகள் தவறானது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் அவர் விளையாடுவார். சில நேரங்களில் சுழற்சி முறை ஓய்வு கேப்டன் விராட்கோலிக்கும் அளிக்கப்படும். ஐ.பி.எல். போட்டியில் இருந்து விராட்கோலி தொடர்ச்சியாக ஓய்வு இல்லாமல் விளையாடி வருகிறார். அவரது பணிச்சுமையை கவனித்து வருகிறோம். அவருக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு பிறகு இதனை கவனத்தில் கொள்வோம்.

தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் ஸ்ரேயாஸ் அய்யர், முகமது சிராஜ் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டிக்கு மட்டும் நெஹரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவாரா? என்பது குறித்து அணி நிர்வாகம் தான் முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *