இங்கிலாந்தில் வரும் மே மாதம் நடைபெறும் உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக இந்திய அணி இரு பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்க உள்ளது.
ஒருநாள் போட்டித்தொடருக்கான 12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணியும், தகுதிச்சுற்றில் இரு அணிகளும் இடம் பெறுகின்றன.
உலகக் கோப்பை போட்டிக்கு முன்பாக, ஒவ்வொரு அணியும் பங்கேற்கும் பயிற்சிப்போட்டிகள் குறித்த விவரத்தை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் பிரதானப் போட்டிகளுக்கு முன்பாக இரு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகின்றன.
மே 25-ம் தேதி தி ஓவல் மைதானத்தில் நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.
இது தவிர 24-ம் தேதி பிரிஸ்டன் கவுண்டி மைதானத்தில் நடக்கும் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். அதேநாளில் கார்டிப் வேல்ஸ் அரங்கில் நடக்கும் போட்டியில் இலங்கை தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
25-ம் தேதி ஹேம்ப்ஸ்பயர் பவுலில் நடக்கும் போட்டியில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.

26-ம் தேதி பிரிஸ்டல் மைதானத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கும் மே.இ.தீவுகள் அணிக்கும், கார்டிப் மைதானத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தானும், வங்கதேசமும் மோதுகின்றன.
27-ம் தேதி ஹேமிஸ்பயர் மைதானத்தில் நடக்கும் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது இலங்கை அணி. தி ஓவல் மைதானத்தில் நடக்கும் 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது ஆப்கானிஸ்தான் அணி.
பிரிஸ்டன் மைதானத்தில் 28-ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியும், மே.இ.தீவுகள் அணியும் களம் காண்கின்றன.
இது குறித்து உலகக் கோப்பை மேலாளர் இயக்குநர் ஸ்டீவ் எல்வொர்த்தி கூறுகையில், ” உலகக் கோப்பை போட்டி தொடங்கும் முன் ரசிகர்களுக்கு உற்சாகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்துவது இந்தப் பயிற்சிப் போட்டிகள்தான். அதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன். உலகில் சிறந்த வீரர்களை ரசிகர்கள் மீண்டும் தங்களின் உள்ளூர் மைதானத்தில் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.
ரோகித் சர்மா

கடந்த 2013-ம் ஆண்டு முதல் இவர் அற்புதமாக ஆடிவருகிறார். 2017 ஆம் ஆண்டு மட்டும் 1293 ரன்கள் விளாசினார். அவர் சென்ற வருடம் 1030 ரன்களை விளாசியுள்ளார். இதன் சராசரி 73 ஆகும். இவர் இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அற்புதமாக ஆடுவார் என்று நம்பலாம்.
ஷிகர் தவான்

ஷிகர் தவான் ஐகிசி நடத்தும் பெரிய தொடர்பில் அற்புதமாக ஆடக்கூடியவர். கடந்த மூன்று வருடங்களாக அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2017 ஆம் ஆண்டு அவர் 960 ரன்களை விளாசியுள்ளா.ர் அதேபோல் 2018 ஆம் ஆண்டு 795 ரன்கள் விளாசி உள்ளார். தற்போது அவர் நல்ல தரத்துடன் இருப்பதால் 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக நன்றாக ஆடுவார்.
விராட் கோலி

2019 உலகக்கோப்பை தொடரில் இவர்பெயர் இல்லை என்றால் தான் ஆச்சர்யம் எப்போதும் தொடர்ச்சியாக நன்றாக ஆடுவதில் வல்லவர். ஒவ்வொரு வருடமும் அற்புதமாக ஆடி வரும் இவர் கண்டிப்பாக இந்திய அணிக்கு வெற்றி தேடித் தருவார் என்று நம்புவோம்.
ஜஸ்பிரிட் பும்ரா
சமீபகாலமாக இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணிக்கு தலைமை தாங்கி அணியை வழி நடத்தி வருபவர் இவர். இவரது அதிவேகமான துல்லியமான பந்துவீச்சு எதிரணிகளை நிலைகுலைய வைத்து வருகிறது 2016-ம் ஆண்டு 17 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் 2017 ஆம் ஆண்டு 39 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு 22 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அபார சாதனை படைத்துள்ளார்.

குல்தீப் யாதவ்

வெளிநாடுகளில் எப்போதும் நன்றாக பந்து வீசி வரும் இங்கிலாந்திலும் அற்புதமாக பந்து வீசினார். 2017 ஆம் ஆண்டு அவர் 14 போட்டிகளில் ஆடி 28 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். தற்போது வரை 19 போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ள அவர் 45 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்
மகேந்திர சிங் தோனி

கடந்த சில வருடங்களாக நன்றாக ஆட முடியாமல் தவித்து வந்தார். 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்த உடன் தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் அடித்து தன்னை மீண்டும் நிரூபித்தா.ர் 2019 உலகக்கோப்பை தொடருடன் ஓய்வு பெறுவார் என்றாலும் அவர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியம்..