இந்தியாவிற்க்கு 237 ரன் இலக்கு

இந்தியா இலங்கை இடயேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2வது போட்டி இன்று பல்லகேலே மைதானத்தில் மதியம் 2 30க்கு தொடங்கியது. முதல் போட்டியில் வென்றா இந்தியா 1-0 என்ற வெற்றிக் கணக்குடன் களம் இறங்கியது.

டாஸ் வென்ற கேப்டன் விராத் கோலி இலங்கையை பேட்டிங்க் செய்ய பணித்தார். தொடக்க முதலே அதிரடியாக ஆடினர் இலங்கை அணி தொடக்க வீரர்கள் நிரோசன் டிக்வெல்லா மற்றும் தனுஷ்கா குணாதுலகாவும்.

குறிப்பாக டிக்வெல்லா பும்ராவின் பந்தை நன்றாக பதம் பார்த்தார். பின்னர் சுதாரித்துகொண்டு ஒரு சொடுக்கு பந்தை போட அந்த பந்த அரை மனதாக அடிக்க்க சென்ற டிக்வெல்ல அந்த பந்தால் பீட் ஆகி சார்ட் லெக்கில் நின்றிருந்த தவானிடம் அழகான கேட்ச் கொடுத்தார். பீல்டிங்கில் குறை சொல்ல முடியதா இந்திய அணியின் தவான் அழகாக அந்த கேட்சை பிடித்து டிக்வெல்லாவை வழியனுப்பி வைத்தார்.

அதேபோல் மற்றொரு தொடக்க வீரர் தனுஷ்கா குணதிலகாவை 15வது ஓவரில் சகால் வீசிய பந்தில் ஸ்டெம்பிங்க் செய்தார் தோனி. அந்த வீடியோ கீழே உள்ளது.

பின்னர் இலங்கை அணி 15 ஓவரில் 70 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து சிறிது நல்ல நிலைமையில் இருந்தது. அடுத்து வந்த கேப்டன் உபுல் தரங்கா அடுத்த ஓவரிலேயே ஆட்டம் இழந்தார். 7 பந்துகளுக்கு 9 ரன் மட்டுமே அடித்திருந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் கேப்டன் கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

முனனாள் கேப்டன் மேட்யூசும் பெரிதாக சோபிக்கவில்லை அக்சர் படேல் பந்தில் லெக் பிஃபோர் விக்கெட் ஆகி வேளியேறினார். இலங்கை 121 ரன்னிற்க்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின்னர் 6வது விகெட்டுகு ஜோடி சேர்ந்த மிலிந்தா சிரிவர்தனா மற்றும் சமரா கபுகேதராவும் நன்றாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

நன்றாக ஆடிய சிரிவர்தனா 49 பந்திடில் அரை சதம் கடந்தார்.பின்னர் பும்ராவின் சொடுக்கு பந்தில் நேராக ரோஹித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர 58 பந்துகளுக்கு 58 ரன் அடித்திருந்தார். அதில் 2 ஃபோர் மற்றும் 1 சிக்சர்களும் அடங்கும். அடுத்து 47வது ஓவரில் தனது வழக்கமான யார்க்கர் பந்தில் சமரா கபுகேதராவின் ஸ்டெம்புகளை பதம் பார்த்து அவர பெவிலியன் அனுப்பினார். 61 பந்துகளுக்கு 40 ரன் எடுத்திருந்த நிலையில் இலங்கையின் 7வது விக்கெட்டாக வெளியேறினார் சமரா.

பினார் அடுத்தடுத்து தாக்கு பிடிக்க முடியாமல் ஆட்டம் இழந்தனார். 50 ஓவருக்கு 8 விக்கெட் இழந்து 236 ரன்  அடித்தது. இலங்கை தரப்பில் மிலிண்டா சிரிவர்தனா 58 ரன்னும், கபுகேதரா 40 ரன்னும், டிக்வெல்லா 31 ரன்னும் அடித்தனர்.

இந்தியா தரப்பில் ஜஸ்பிரிட் பும்ரா 10 ஓவர்களுக்கு 43 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளாய் வீழ்த்தினார்.மற்றும் சஹால் 10 ஓவர்களுக்கு 43 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். இதில 2 மெய்டன் ஓவர்களும் அடங்கும்.

Editor:

This website uses cookies.