இலங்கை டெஸ்டில் இடம் பிடித்தால் அறிமுக போட்டியாக கருதுவேன் - ஷாம்சி 1

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்துள்ளால் என்னுடைய முதல் டெஸ்டாகவே கருதுவேன் என ஷாம்சி தெரிவித்துள்ளார்.

இலங்கை டெஸ்டில் இடம் பிடித்தால் அறிமுக போட்டியாக கருதுவேன் – ஷாம்சி
தென்ஆப்பிரிக்கா அணி மூன்று வகை கிரிக்கெட்டிலும் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முதலில் நடக்கிறது. முதல் டெஸ்ட் காலேயில் நாளைமறுநாள் (12-ந்தேதி) தொடங்குகிறது.இலங்கை டெஸ்டில் இடம் பிடித்தால் அறிமுக போட்டியாக கருதுவேன் - ஷாம்சி 2

காலே மைதானம் பெரும்பாலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். மேலும் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க, சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் இலங்கை ஆடுகளத்தை தயார் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்ஆப்பிரிக்காவும் கேசவ் மகாராஜ், தப்ரைஸ் ஷாம்சி, ஷான் வோன் பெர்க் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. ஆனால் இதில் இருவர் ஆடும் லெவனில் இடம்பிடிக்க வாய்ப்புள்ளது.இலங்கை டெஸ்டில் இடம் பிடித்தால் அறிமுக போட்டியாக கருதுவேன் - ஷாம்சி 3

ஷாம்சி இதுவரை ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். பயிற்சி ஆட்டத்தில் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார். இதனால் காலே டெஸ்டில் இடம்கிடைக்கும் என்று நம்பிக்கையில் உள்ளார். இந்நிலையில் காலே டெஸ்டில் இடம்பிடித்தால், என்னுடைய அறிமுக போட்டியாகவே நினைப்பேன் என்ற ஷாம்சி தெரிவித்துள்ளார்.இலங்கை டெஸ்டில் இடம் பிடித்தால் அறிமுக போட்டியாக கருதுவேன் - ஷாம்சி 4

இதுகுறித்து ஷாம்சி கூறுகையில் ‘‘நான் ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் இடம்பிடித்துள்ளேன். அதுவும் நீண்ட காலத்திற்கு முன்புதான் களம் இறங்கினேன். இலங்கை தொடரில் இடம்பிடித்தேன் என்றால் அறிமுகம் டெஸ்ட் என்பதை போல்தான் உணர்வேன்.

தென்ஆப்பிரிக்கா அணி பொதுவாக இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடாது. இந்த கண்டிசனில் ஒருவேளை விளையாட வாய்ப்புள்ளது. நான் விளையாடுவதை உறுதியாக கூற இயலாது. ஒருவேளை இடம்பிடித்தால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்’’ என்றார்.இலங்கை டெஸ்டில் இடம் பிடித்தால் அறிமுக போட்டியாக கருதுவேன் - ஷாம்சி 5

தென்ஆப்பிரிக்கா அணி எப்போதுமே வேகப்பந்து வீச்சாளரான ஸ்டெயின், பிளாண்டர், ரபாடா ஆகியோரை நம்பியே களம் இறங்கும். தற்போது இந்த வரிசையில் லுங்கி நிகிடி இடம்பிடித்துள்ளார்.

28 வயதாகும் ஷாம்சி டெஸ்ட் போட்டியில் 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அடிலெய்டில் அறிமுகமானார். அதன்பின் தற்போது வரை டெஸ்ட் போட்டியில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *