ஐசிசி டெஸ்ட் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: ஸ்டீவ் ஸ்மித் அபாரம்! விராட் கோலி எங்கே? முழு பட்டியல் 1

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது அந்த இடத்தைத் தட்டிப் பறிக்கும் நோக்கத்தில் இருக்கிறார் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித். 2019 ஆஷஸ் தொடரில் ஸ்மித், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். முதல் ஆஷஸ் போட்டியில் இரண்டு சதங்கள் அடித்த ஸ்மித், இரண்டாவது டெஸ்ட்டில் அரைசதம் அடித்தார்.

விராட் கோலி, 922 புள்ளிகளுடன் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கிப் பின்னர் 913 புள்ளிகளுடன் ஸ்மித், 2வது இடத்தைப் பிடித்துள்ளார். அந்த இடத்தில் 887 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சன் இருந்தது குறிப்பிடத்தக்கது. வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்திய அணி, டெஸ்ட் தொடரை ஆரம்பிக்க இருக்கிறது. அதில் கோலி விளையாட இருக்கிறார்.ஐசிசி டெஸ்ட் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: ஸ்டீவ் ஸ்மித் அபாரம்! விராட் கோலி எங்கே? முழு பட்டியல் 2

இந்தியர்களைப் பொறுத்தவரை கோலியைத் தவிர, டாப் 10 பேட்ஸ்மேன்கள் பட்டியலில், டெஸ்ட் நிபுணர் செத்தேஷ்வர் புஜாரா இருக்கிறார். அவர் 881 புள்ளிகளுடன் 4வது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையைப் பொறுத்தவரை இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, 794 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறார். லார்ட்ஸ் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய பேட் கம்மின்ஸ், 914 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா, 3வது இடத்தில் இருக்கிறார். அணிகள் பட்டியலில் இந்தியா, முதலிடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து, இரண்டாவது இடத்திலும் தென் ஆப்ரிக்கா, மூன்றாவது இடத்திலு நிலை கொண்டுள்ளன.

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: ஸ்டீவ் ஸ்மித் அபாரம்! விராட் கோலி எங்கே? முழு பட்டியல் 3

 

ஐ.சி.சி மதிப்பீடு  ஒருநாள் டெஸ்ட் டி 20
சிறந்த அணி இந்தியா இந்தியா பாகிஸ்தான்
சிறந்த பேட்ஸ்மேன்கள் விராட் கோஹ்லி விராட் கோஹ்லி பாபர் ஆசாம்
சிறந்த பவுலர் ஜஸ்பிரீத் பும்ரா பாட் கம்மின்ஸ் ரஷீத் கான்
சிறந்த ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் ஜேசன் ஹோல்டர் க்ளென் மேக்ஸ்வெல்

* 19 ஆகஸ்ட் 2019 அன்று புதுப்பிக்கப்பட்டது

 

ஐ.சி.சி டெஸ்ட் அணி தரவரிசை

நிலை அணி போட்டிகளில் புள்ளிகள் மதிப்பீடுகள்
1 இந்தியா 32 3,631 113
2 நியூசிலாந்து 23 2,547 111
3 தென்னாப்பிரிக்கா 27 2,917 108
4 இங்கிலாந்து 36 3,778 105
5 ஆஸ்திரேலியா 27 2,640 98
6 இலங்கை 37 3,462 94
7 பாக்கிஸ்தான் 27 2,263 84
8 மேற்கிந்திய தீவுகள் 29 2,381 82
9 வங்காளம் 22 1,438 65
10 ஜிம்பாப்வே 9 140 16

* ஆகஸ்ட் 19, 2019 அன்று புதுப்பிக்கப்பட்டது

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: ஸ்டீவ் ஸ்மித் அபாரம்! விராட் கோலி எங்கே? முழு பட்டியல் 4

ஐ.சி.சி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 விராட் கோஹ்லி  இந்தியா 922
2  ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா 913
கேன் வில்லியம்சன் நியூசிலாந்து 887
4 சேடேஷ்வர் புஜாரா இந்தியா 881
5 ஹென்றி நிக்கோல்ஸ் நியூசிலாந்து 778
6 ஜோ ரூட் இங்கிலாந்து 741
7 டேவிட் வார்னர் ஆஸ்திரேலியா 721
8 ஐடன் மார்க்ராம் தென்னாப்பிரிக்கா 719
9 குயின்டன் சமையல்காரர் தென்னாப்பிரிக்கா 718
10 ஃபிராங்கோயிஸ் டு பிளெசிஸ் தென்னாப்பிரிக்கா 702

 

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப்பட்டியல் வெளியீடு: ஸ்டீவ் ஸ்மித் அபாரம்! விராட் கோலி எங்கே? முழு பட்டியல் 5

ஐ.சி.சி டெஸ்ட் பவுலர் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 பாட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியா 914
2 ககிசோ ரபாடா தென்னாப்பிரிக்கா 851
3 ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து 831
4 வெர்னான் பிலாண்டர் தென்னாப்பிரிக்கா 813
5 ரவீந்திர ஜடேஜா இந்தியா 794
6 நீல் வாக்னர் நியூசிலாந்து 890
7 ட்ரெண்ட் போல்ட் நியூசிலாந்து 787
8 முகமது அப்பாஸ் பாக்கிஸ்தான் 770
9 ஜேசன் ஹோல்டர் மேற்கிந்திய தீவுகள் 770
10 ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா 763

* ஆகஸ்ட் 12, 2019 அன்று புதுப்பிக்கப்பட்டது

 

 

ஐ.சி.சி டெஸ்ட் ஆல்-ரவுண்டர்ஸ் தரவரிசை

நிலை ஆட்டக்காரர் அணி மதிப்பீடு
1 ஜேசன் ஹோல்டர் மேற்கிந்திய தீவுகள் 439
2 ஷாகிப் அல் ஹசன் வங்காளம் 399
3 ரவீந்திர ஜடேஜா இந்தியா 387
4 பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து 346
5 வெர்னான் பிலாண்டர் தென்னாப்பிரிக்கா 326

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *