இந்திய அணி கேப்டனாக கோலி நீண்டகாலம் நீடிப்பார் என தெரியவில்லை!! : கிரீம் ஸ்மித் 1

தென் ஆப்பிரிக்காவின் வெற்றிகரமான கேப்டனான கிரேம் ஸ்மித், கோலியின் அணுகுமுறை அவரை நீண்ட கேப்டன்சி தெரிவாக வைத்திருக்க முடியுமா என்பதை உறுதி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கோலி அடிக்கடி அணியை மாற்றுவதும், தன் மனம்போன போக்கில் முடிவுகளை எடுப்பதும் பல விமர்சனங்களை தருவித்துள்ளது. கிரிக்கெட் எழுத்தாளர் ராமச்சந்திர குஹா, பிசிசிஐ-யில் கோலியின் அதிகாரம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். கோலியை எதிர்த்து அவரைக் கண்டித்து அடக்கும் பயிற்சியாளர், நிர்வாகி தேவை இல்லையெனில் இந்திய கிரிக்கெட் பெரும் சீரழிவைச் சந்திக்கும் என்று எச்சரித்திருந்தார். கிட்டத்தட்ட தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரேம் ஸ்மித்தும் இதையே தெரிவித்துள்ளார்.Virat Kohli, India, Cricket, Sri Lanka, Ricky Ponting

தென் ஆப்பிரிக்கா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கவாஸ்கரும் கிரேம் ஸ்மித்தும் கலந்து கொண்டனர், அதில் கிரேம் ஸ்மித் கூறியதாவது:

“நான் விராட் கோலியைப் பார்த்த வரை அவரை ஆக்கபூர்வமாக வழிநடத்தும் தேவைப்பட்டால் அவரது முடிவுகளைக் கேள்விகேட்கும்,மாற்றும் பயிற்சியாளர் ஒருவர் தேவை என்று தோன்றுகிறது. உத்தி ரீதியாக அவரிடம் அனைத்து திறமைகளும் உள்ளன. அவருக்கு தன் ஆட்டம் பற்றி தெரிந்திருக்கிறது. களத்தில் அனைவருக்குமான தரநிலையை இவரே நிறுவுகிறார்.

இந்திய அணி கேப்டனாக கோலி நீண்டகாலம் நீடிப்பார் என தெரியவில்லை!! : கிரீம் ஸ்மித் 2
Virat Kohli captain of India celebrates the wicket of Sadeera Samarawickrama of Sri Lanka during day three of the 3rd test match between India and Sri Lanka held at the Feroz Shah Kotla Stadium in Delhi on the 4th December 2017
Photo by Deepak Malik / BCCI / Sportzpics

இந்நிலையில் அவரது சூழ்நிலையில் உண்மையில் ஆக்கபூர்வமான ஒரு நபர், அவருடன் பேசி, அல்லது அவருக்கு சவால் அளிக்கும் வித்தியாசமான கருத்துகளை உடைய நபர் தேவை, அவர் கோபப்பட்டு கோலியுடன் மோதும் நபராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் கோலியை சிந்திக்க வைக்க வேண்டும். வேறு பல சாத்தியங்களுக்கு கோலியின் கண்களைத் திறக்கும் பயிற்சியாளராக இருக்க வேண்டும். இது அவரை உண்மையில் ஒரு நல்ல தலைவராக்கும்.

இந்திய அணி கேப்டனாக கோலி நீண்டகாலம் நீடிப்பார் என தெரியவில்லை!! : கிரீம் ஸ்மித் 3
India’s national cricket team head coach Ravi Shastri look on during a training session at Supersport Park cricket ground on January 12, 2018 in Centurion, South Africa. / AFP PHOTO / Phill Magakoe (Photo credit should read PHILL MAGAKOE/AFP/Getty Images)

கோலி ஒரு தனித்துவமான வீரர் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரது தீவிரம் அவர் ஆட்டத்துக்கு உதவுகிறது. அவருக்கு மோதல் பிடித்திருக்கிறது. தீவிரம் அவரிடமிருந்து சிறந்தவற்றை வெளிக்கொணர்கிறது. ஆனால் சில வேளைகளில் ஒரு தலைவராக நாம் எப்படித் தாக்கம் செலுத்துகிறோம் என்பதையும் அவர் பரிசீலிக்க வேண்டியுள்ளது. இந்த இடத்தில் அவர் வளர வேண்டிய தேவை இருக்கிறது.

ஆனால் சில வேளைகளில் அவரது எதிர்வினைகள் எதிர்மறையான ஒரு தாக்கத்தை அணியினரிடத்தில் ஏற்படுத்தி விடும். உலக கிரிக்கெட்டில், இந்திய கிரிக்கெட்டில் அவர் எவ்வளவு சக்தி வாய்ந்த வீரர் என்பதை நாம் அறிவோம். அவர் தன்னைச் சுற்றி ஒளிவட்டத்தை ஏற்படுத்தியுள்ளார். இதனை அவர் தன்னைப் போல் தன் அணியும் வெற்றிபெற பயன்படுத்த வேண்டும்.

இந்திய அணி கேப்டனாக கோலி நீண்டகாலம் நீடிப்பார் என தெரியவில்லை!! : கிரீம் ஸ்மித் 4
Virat Kohli’s anger at losing the Test series in South Africa showed up in the post-match press conference after India lost the second Test in Centurion on Wednesday by 135 runs.

அவரை நான் பார்த்தவரையில் நீண்ட காலம் இந்திய அணியின் கேப்டன்சி தெரிவாக அவர் நீடிப்பாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. உள்நாட்டுப் பாதுகாப்பிலிருந்து வெளிநாட்டுக்கு வரும் போது அவர் நெருக்கடியைச் சந்திக்க வேண்டிவரும் செய்தியாளர்கள் சந்திப்பை எதிர்கொள்ள வேண்டும், இதோடு அணியாக ஒட்டுமொத்தமாக பார்மைக் கண்டுபிடிக்க திணற வேண்டியுள்ளது. கோலிக்கு இந்தச் சுமையை அளிக்க வேண்டுமா என்று தெரியவில்லை. அல்லது இந்தியா இன்னொரு கேப்டனைக் கண்டுபிடிக்க வேண்டுமா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

ஒரு கேப்டனாக ஒட்டுமொத்த சூழ்நிலையின் அவசத்தைப் புரிந்து கொள்ள வேண்டும், வீரர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார் கிரேம் ஸ்மித்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *