Cricket, India, Australia, Bhuvneshwar Kumar, Jasprit Bumrah, Steve Smith

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்மித், கிரிக்கெட் போட்டியின் மூலம் கிடைக்கும் பணத்தை கிரிக்கெட் வளர்ச்சிக்காக வழங்குகிறார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் திகழ்ந்தவர் ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்கா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.

ஆஸ்திரேலிய போட்டியில் கிடைக்கும் வருமானத்தை கிரிக்கெட் வளர்ச்சிக்காக வழங்குகிறார் ஸ்மித் 1
CAPE TOWN, SOUTH AFRICA – MARCH 24: Steven Smith (capt) of Australia during day 3 of the 3rd Sunfoil Test match between South Africa and Australia at PPC Newlands on March 24, 2018 in Cape Town, South Africa. (Photo by Ashley Vlotman/Gallo Images/Getty Images)

கேப்டவுனில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கேப்டனான ஸ்மித்திற்கு ஓராண்டு தடையும் விதிக்கப்பட்டது. தற்போது சர்வதேச போட்டியில் விளையாட தடை இருந்தாலும் வெளிநாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய போட்டியில் கிடைக்கும் வருமானத்தை கிரிக்கெட் வளர்ச்சிக்காக வழங்குகிறார் ஸ்மித் 2

இந்த மாதம் நடைபெற இருக்கும் குளோபல் டி20 கனடா லீக்கில் விளையாட இருக்கிறார். இதில் கிடைக்கும் வருமானத்தை அடிமட்டத்தில் இருந்து கிரிக்கெட்டை வளர்க்கும் திட்டத்திற்கு (grassroots cricket programs) வழங்க முடிவு செய்துள்ளார். கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு வருமானத்தை வழங்குகிறார்.

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர். தென்ஆப்பிரிக்கா தொடரின்போது இவருக்கு பெரிய சோதனை ஏற்பட்டது. ஆஸ்திரேலியா அணி பந்தை சேதப்படுத்துதல் (பால் டேம்பரிங்) விவகாரத்தில் சிக்கி தலைகுணிந்தது. இந்த விவகாரத்தில் கேப்டனாக இருந்த ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. அத்துடன் மேலும் ஓராண்டு கேப்டனாக பதவி வகிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தென்ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா திரும்பிய ஸ்டீவ் ஸ்மித் உடனடியாக அமெரிக்கா சென்றார். அங்கு ஓய்வெடுத்த ஸ்மித் தற்போது ஆஸ்திரேலியா வந்துள்ளார். தடைபெற்றாலும் அவருக்கு ஏராளமான ஆதரவு கடிதம், மெயில் ரசிகர்களால் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஸ்மித் மனம் நெகிழ்ந்துள்ளார்.ஆஸ்திரேலிய போட்டியில் கிடைக்கும் வருமானத்தை கிரிக்கெட் வளர்ச்சிக்காக வழங்குகிறார் ஸ்மித் 3

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக மீண்டும் ஸ்மித் வரமுடியும் என முன்னாள் ஆஸ்திரேலியா அணி கேப்டனும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் டைரக்டருமான மார்க் டெய்லர் கூறியுள்ளார்.

இதுகுறித்து மார்க் டெய்லர் கூறுகையில் ‘‘ஸ்டீவ் ஸ்மித்தால் மீண்டும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக முடியும் என நான் இன்னும் நினைக்கிறேன். போட்டியின்போது அங்கே சென்று கொண்டிருந்த சம்பவத்தை அவர் பார்த்துள்ளார். அதில் அவர் ஈடுபடவில்லை. இது கவனக்குறைவால் வந்த தவறு. அவர் சீட்டிங் செய்யவில்லை. அவர் ஒரு சிறந்த மனிதன்’’ என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *