ஐசிசி தரவரிசையப்பட்டியல் அறிவிப்பு: ஸ்மிரித்தி மந்தனா முதலிடம்!! 1

நியூசிலாந்துக்கு எதிரான இறுதி ஒரு நாள் போட்டியில் சதம் விளாசிய இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா வீராங்கனைகளுக்கான ஐசிசி அறிவித்துள்ள உலகத் தரவரிசையில் முதல் இடத்திற்கு உயர்ந்துள்ளார்.

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் நியூசிலாந்து சென்று அந்த அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளனர். அந்த அணிக்கு எதிரான தொடரில் தனது 4வது சதத்தை மந்தனா விளாசியிருந்ததுடன் மற்றொரு போட்டியில் அவுட் ஆகாமல் 90 ரன்கள் எடுத்திருந்தார்.Cricket, Women's World Cup, India, England, Mithali Raj

இந்த நிலையில் நேற்று உலக மகளிர் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது, இதில் முன்னதாக 4வது இடத்தில் இருந்த இந்தியாவின் ஸ்மிரிதி மந்தனா 3 இடங்கள் முன்னேறி முதல் இடத்தை அடைந்துள்ளார். 2018ன் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடி வரும் மந்தனா, கடந்த ஆண்டில் 15 போட்டிகளில் பங்கேற்று 2 சதங்கள் மற்றும் 8 அரை சதங்களை விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மகளிருக்கான உலகத் தரவரிசையில் 3வது இடத்தில் இருந்த இந்திய கேப்டன் மிதாலி ராஜ் 4வது இடத்திற்கு சரிந்துள்ளார். இவர் 200வது போட்டியில் பங்கேற்று புதிய சிறப்பை அடைந்துள்ளார்.

மற்றொரு இளம் இந்திய வீராங்கனையான (18 வயது) ஜெமிமா ரோடிக்ஸ் (18 வயது) ( நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 81 ரன்கள் விளாசியவர்) அதிரடியாக 64 இடங்கள் முன்னேறி 61வது இடத்தை பெற்றுள்ளார். இவர் மொத்தமே 7 போட்டிகளே பங்கேற்றவர் என்பது குறிப்பிடத்தகக்து.ஐசிசி தரவரிசையப்பட்டியல் அறிவிப்பு: ஸ்மிரித்தி மந்தனா முதலிடம்!! 2

பவுலர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி 4வது இடத்தை பெற்றுள்ளார். மற்ற இந்திய வீராங்கனைகளான பூனம் யாதவ், தீப்தி சர்மா ஆகியோர் முறையே 8 மற்றும் 9வது இடங்களை பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து – இந்தியா பெண்கள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது.

இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய வீராங்கனைகள் முதலில் பேட்டிங் செய்தனர். 3-வது வீராங்கனை தீப்தி ஷர்மா 52 ரன்கள் சேர்த்தார். மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியா 149 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து வீராங்கனை அனா பேட்டர்சன் நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார்.

பின்னர் 150 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை பேட்ஸ் (57), 3-வது களம் இறங்கிய சட்டர்வைட் (66 நாட்அவுட்) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து 29.2. ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *