மாரடோனவுக்கும் கங்குலிக்கும் மேட்ச்

முன்னாள் இந்திய கேப்டன் கங்குலியும் கால்பந்து ஜாம்பவான் டியாகோ மாரடோனாவும் ஒரு அறக்கட்டளைக்காக நடத்தப்படும் கால்பந்து போட்டியில் இரு அணிகளாக பிரிந்து ஆட உள்ளனர். அந்த போட்டியின் பெயர் ‘ஒற்றுமைக்கான போட்டி’ (Match For Unity) என்பதாகும். இந்த போட்டி அக்டோபர் 2ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.

 

இவர்களை தவிர இவர்களின் அணியில் பல திரை பிரபலங்கலும் முன்னாள் இன்னாள் கால்பந்து வீரர்களும் ஹாக்கி வீரர்களும் கலந்து கொள்கின்றனர். ஹாக்கி ஜாம்பவான் தன்ராஜ் பிள்ளை, தெலுங்கு திரையுளாக நட்சத்திரம் அபிர் சட்டர்ஜி, கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

முன்னாள் இந்திய கால்பந்தாட்ட அணியின் கேப்டன் பாய்சங் பூட்டியாவிடமும் இதில் கலந்து கொள்வதற்க்கான முயற்ச்சிகள் நடந்து வருகின்றன.இந்த போட்டி கொல்கத்தாவின் பாரசட்டில் உள்ள ஆதித்யா விளையாட்டுப் பள்ளியில் நடைபெறுகிறது.

கொல்கத்தா வருகையை பற்றி மாரடோனா கூறியதாவது,

கொல்கத்தவிற்க்கு மீண்டும் வருவது எனக்கு பெருமைமிகு விசயமாகும். முன்னர் வந்த போது கொலகத்தா எனக்கு நல்ல பல நினைவுகளை கொடுத்துள்ளது. இங்கு ரசிகர்கள் மிக அற்புதமானவர்கள்.

இந்தியா கால்பந்தாட்டத்தை மிகவும் நேசித்து விளையாடும் ஓர் நாடாகும். அங்கு சென்று இந்த தலைமுறை வீரர்களையும் ரசிகர்களையும் பார்க்க மிக ஆர்வலாக உள்ளேன்.

எனகூறி விடை பெற்றார் கால்பந்து ஜாம்பவான்.

Editor:

This website uses cookies.