இவர் மட்டும் இல்லைனா என்னோட கிரிக்கெட் வாழ்க்கையே வீணாகிருக்கும்; ஹர்பஜன் சிங் நெகிழ்ச்சி !!

சரியான நேரத்தில் சௌரவ் கங்குலி மட்டும் எனக்கு உதவவில்லை என்றால் என்னுடைய கிரிக்கெட் கரியர் முடிவுக்கு வந்திருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது.

 

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் ஹர்பஜன் சிங்கை சேர்கலாமா வேண்டாமா என்ற நிலைமை ஏற்பட்டிருந்து அப்பொழுது சௌரவ் கங்குலி, ஹர்பஜன் சிங் மீது நம்பிக்கை வைத்து அவரை இந்திய அணியின் ஆடும் லெவனில் விளையாட வைத்தார்.

இதன் பிரதிபலனாக இந்திய அணி அந்த டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது, மேலும் அந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி, அந்தத் தொடரின் சிறந்த வீரர் என்ற அவார்டையும் பெற்றார். இதனின் நீட்சியாகவே இவருக்கு அடுத்தடுத்து இந்திய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பும் கிடைத்தது, அதை சரியாக பயன்படுத்தி அந்த காலகட்டத்தில் இந்திய அணியின் ரெகுலர் வீரராக ஹர்பஜன் சிங் வலம் வந்தார்.

இந்த நிலையில் அந்த சம்பவத்தை நினைவுபடுத்தும் வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், சவுரவ் கங்குலி தனக்கு செய்த உதவியை ஞாபகப்படுத்தி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.

 

அதில் பேசிய அவர், “அந்தத் தொடரில் கங்குலி மட்டும் என்னை அணியில் இணைக்க வில்லை என்றால் நிச்சயம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்காது, அப்படி வெற்றி பெறவில்லை என்றால் நிச்சயம் அது சவுரவ் கங்குலியின் கேப்டன்ஷிப்பிர்க்கும் ஆபத்தாக அமைந்திருக்கும், அப்போது கடவுள் போன்று என்னுடைய கையைப் பிடித்து கங்குலி காப்பாற்றினார். இதனால்தான் என்னால் சிறப்பாக செயல்பட முடிந்தது, அந்த சம்பவம் எங்களுடைய இருவரின் கிரிக்கெட் கரியரையும் காப்பாற்றியது, அவர் என்னை அணியில் இணைத்துக் உதவினார் ஆனால் அதை நான் சிறப்பாக பயன்படுத்தி கிரிக்கெட் கரியரை காப்பாற்றிக் கொண்டேன் என்று ஹர்பஜன்சிங் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

Mohamed:

This website uses cookies.