நான் விளையாடியதிலேயே தான் சவுரவ் கங்குலி சிறந்த கேப்டன்: விவிஎஸ் லட்சுமனன் 1

தான் விளையாடியதிலேயே சவுரவ் கங்குலி தான் மிகச் சிறந்த கேப்டன் என விவிஎஸ் லட்சுமனன் கூறியுள்ளார்

சௌரவ் கங்குலி இந்தியாவின் தலை சிறந்த கேப்டன்களில் ஒருவராகப் போற்றப்படுபவர். 2000 ஆம் ஆண்டு இந்திய அணி சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தவித்து வந்த நிலையில், சௌரவ் கங்குலி கேப்டனாக பொறுப்பேற்றார். இந்திய அணியை நல்வழிப்படுத்தி முன்னேற்றத்திற்கு கொண்டு சென்றார் கங்குலி. கடின காலகட்டத்தில் சௌரவ் கங்குலி பெரும்பங்காற்றினார்.

இந்த முன்னாள் இந்திய கேப்டன் பல்வேறு சாதனைகளை செய்து இருந்தாலும் 2001-ஆம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றிருந்தது, சவுரவ் கங்குலி இன்றளவும் நினைவில் வைத்துள்ளார். அந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இந்தியா 0-1 என்று பின்னடைவில் இருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் போல்லோ ஆனை பெற்றிருந்த இந்தியா அணி லட்சுமணின் அபார 281 ரன்களும், டிராவிடின் 180 ரன்களும் இந்தியாவை வெற்றி பெற செய்தது.நான் விளையாடியதிலேயே தான் சவுரவ் கங்குலி சிறந்த கேப்டன்: விவிஎஸ் லட்சுமனன் 2

அந்தப் போட்டியின் நிகழ்வே இப்புத்தகத்திற்கு தலைப்பாக இருக்கிறது

லட்சுமணின் 281 ரன்களின் முக்கியத்துவத்தை பற்றி கூறிய கங்குலி “கடந்த மாதம் லட்சுமணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன், ஆனால் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. நான் கூறியது என்னவென்றால் இந்த சுயசரிதைக்கு நீங்கள் வைத்திருக்கின்ற தலைப்பு சரியானதாக இல்லை. “281 and Beyond and that Saved Sourav Ganguly’s Career” என்பதுதான் சரியான தலைப்பு” என்று கூறியிருந்தார்

மேலும் அவர் கூறியதாவது “நான் இந்த தலைப்பை எதிர்பார்க்கிறேன், ஏனென்றால் லட்சுமண் 281 ரன்களை அடிக்காமல் இருந்திருந்தால் அந்த டெஸ்ட் தொடரை இழந்திருப்போம், நான் மறுபடியும் கேப்டனாக செயல்பட வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும்” என்று கூறினார்.சூதாட்ட சர்ச்சையால் தவித்துக்கொண்டிருந்த இந்திய அணி, இந்த டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவி இருந்தால், பெரும் சிக்கலுக்கு ஆளாகியிருக்கும். லட்சுமணின் 281 ரன்கள் இந்திய அணிக்கு ஒரு புதுப் பாதையை உருவாக்கியது என்றே கூறலாம்.Cricket, India, Virat Kohli, Virender Sehwag, Sri Lanka

அனைத்து அணிகளும் உலகக் கோப்பை தொடருக்கு இப்போதிருந்தே தயார் செய்து வருகின்றன. சுமார் 5 மாதங்கள் உள்ள நிலையில், எந்த அணி உலகக் கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில், 2019 ஐம்பது ஓவர் உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி வெல்லும் என முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் கணித்துள்ளார்.

“இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பிடித்தமானவை. ஒரு இந்தியராக, இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் லார்ட்ஸ் மைதானத்தில் எனது ஜெர்சியை கழற்றப்போவதில்லை. இந்த சவாலை, விராட் கோலிக்கு சவுரவ் கங்குலி அளித்துள்ளார்.” என்று அவர் கூறினார்.

தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் முன்னிலையில் உள்ளன. முதல் இடத்தில் இங்கிலாந்தும், 2-வது இடத்தில் இந்தியாவும் உள்ளது. இரு அணிகளும் 2018ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்த வரிசையில், கடைசி இரண்டு இடத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இருக்கின்றன.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *