எப்போதும் கிரிக்கெட் ஒரு கேப்டனுக்கான கேம், அதனால் பயிற்சியாகளர்கள் கேப்ட்னின் முடிவில் தலையிடாதீர்கள் என கூறி ரவி சாஸ்திர்யை மறைமுகமாக தாக்கியுள்ளார் முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலி.
துபாயில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர் 4 சுற்றில் நேற்றுமுன்தினம் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. ஷோயிப் மாலிக் 78, சர்ப்ராஸ் அகமது 44, பஹர் ஸமான் 31, ஆசிப் அலி 30 ரன்கள் சேர்த்தனர்.
கடைசி கட்டத்தில் ஜஸ்பிரித் பும்ரா அபாரமாக பந்து வீசியதால்பாகிஸ்தான் அணியின் ரன் குவிப்பை வெகுவாக கட்டுப்படுத்த முடிந்தது. கடைசி 7 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெறும் 38 ரன்களையே சேர்த்திருந்தது. பும்ரா 10 ஓவர்களை வீசி 2 விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். அவர், வீசிய 39 பந்துகளில் ரன்கள் ஏதும் சேர்க்கப்படவில்லை.
238 ரன்கள் இலக்குடன் பேட்செய்த இந்திய அணி 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது. ஷிகர் தவண் 100 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 114 ரன்களும், ரோஹித் சர்மா 119 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 111 ரன்களும் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 210 ரன்கள் குவித்து மிரளச் செய்தது. 9 விக்கெட்கள் வித்
தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு சூப்பர் 4 சுற்றில் 2-வது வெற்றியாக அமைந்தது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி, வங்கதேசத்தையும் தோற்கடித்திருந்தது.
இந்த இரு வெற்றிகளின் மூலம் இந்திய அணி வரும் 28-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இந்தத் தொடரில் தோல்வியை சந்திக்காமல் வலம் வரும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி சூப்பர் 4 சுற்றில் தனது கடைசி ஆட்டத்தில் இன்று ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. ஏற்கெனவே இறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி நிர்வாகம் நடுகள வீரர்களின் திறனை சோதித்து பார்க்கக்கூடும் என கருதப்படுகிறது
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா, ஷிகர் தவண் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 210 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. இலக்கை விரட்டும் போது இந்திய தொடக்க ஜோடிகளில் இதற்கு முன்னர் கடந்த 2009-ம் ஆண்டு ஹாமில்டனில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கவுதம் காம்பீர், சேவக் ஜோடி 201 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.
பாகிஸ்தானுக்கு எதிராக இதற்கு முன்னர் இந்திய தொடக்க ஜோடி (கங்குலி-சச்சின்) சேர்த்த அதிக ரன்கள் 159 ஆகவே இருந்தது. இந்த சாதனையை கடந்துள்ள ரோஹித்-தவண் கூட்டணி, ஆசிய கோப்பை வரலாற்றில் தொடக்க விக்கெட்டுக்கு அதிக ரன்கள் சேர்த்த ஜோடி என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணியை அதிக விக்கெட்கள் (9 விக்கெட்கள்) வித்தியாசத்தில் முதன்முறையாக இந்திய அணி வீழ்த்தியுள்ளது.
ரோஹித் சர்மா 94 ரன்களை கடந்த போது, ஒருநாள் போட்டியில் 7,000 ரன்களைக் குவித்த 9-வது இந்தியர் என்ற சாதனையை படைத்தார். மேலும் இந்த மைல்கல் சாதனையை விரைவாக எட்டிய 5-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அவர், 181 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை எட்டியுள்ளார். இந்த வரிசையில் ஹசிம் ஆம்லா (150), விராட் கோலி (161), டி வில்லியர்ஸ் (166), கங்குலி ஆகியோர் (174) முதல் 4 இடங்களில் உள்ளனர்.