இந்தியாவின் துவக்க வீரர்கள் முரளி விஜய் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் கடுமையாக சரிந்து வருவதால் அவர்கள் மீது பல்வேறு விமர்சனங்கள் பாய்ந்து வருகிறது இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இருவரையும் சாடியுள்ளார் இதுகுறித்து அவர் கூறியதாவது துவக்க வீரர் முரளி விஜய் எளிதாக பேட்டை வீசுகிறார் புதிய பந்து வந்து கொண்டிருக்கிறது இவர் அசால்டாக பேட்டை உள்ளே விட்டுக் கொண்டிருக்கிறார்.
அவர் பொறுமையாக நின்று தாக்குதல் இல்லாமல் ஆட வேண்டும் இவ்வாறு ஆடினால் அவர் இப்படித்தான் தனது விக்கெட்டை இழந்து விடுவார் மூன்று ஆட்டத்தை ஆடி விட்டார் என்றும் சரியாக ஆடவில்லை மேலும் நீங்கள் துவக்க வீரராக மாறிவிட்டாள் எப்போதும் புதிய பந்தை அடித்து கேஎல் ராகுல் அதனை விராட் கோலியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று துவக்க வீரர்கள் இருவரையும் சாடியுள்ளார் சவுரவ் கங்குலி.பெர்த்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டின் மூன்றாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து, இந்தியாவை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் பெர்த்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 326 ரன்கள் சேர்த்தது.
அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா கோலியின் சதம் மற்றும் ரகானேயின் அரை சதத்தால் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா 43 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கியது. மார்கஸ் ஹாரிஸ், ஆரோன் பிஞ்ச் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 59 ரன்கள் சேர்த்த நிலையில் ஹாரிஸ் அவுட்டானார். அடுத்து இறங்கிய உஸ்மான் கவாஜா நிதானமாக ஆடினார்.
மறுபுறம் ஷான் மார்ஷ் 5 ரன்னுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 13 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 19 ரன்னுடனும் அவுட்டாகினர். ஆரோன் பிஞ்ச் காயமடைந்து ரிடயர் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார்.

இறுதியில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவை விட 175 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கவாஜா 41 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
இந்தியா சார்பில் மொகமது ஷமி 2 விக்கெட்டும், பும்ரா, இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.