இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் தென்னாப்பிரிக்கா மூன்று அறிமுக வீரர்களை சேர்த்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களான அன்ரிச் நார்ட்ஜே மற்றும் கீப்பர் ரூடி செகண்ட்ஸ் மற்றும் ஸ்பின் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் செனுரன் முத்துசாமி ஆகியோர் முதல் முறையாக அழைப்புகளைப் பெற்றுள்ளனர். டேல் ஸ்டெய்ன் மற்றும் ஹாஷிம் அம்லா இல்லாத தென்னாப்பிரிக்காவின் முதல் டெஸ்ட் தொடராக இது இருக்கும்

தென் ஆப்பிரிக்கா டி20 தொடருடன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும், இதில் முதலாவது போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி தர்மசாலாவில் நடக்க உள்ளது.

அதைத் தொடர்ந்து விசாகப்பட்டினம் (அக். 2-6), ராஞ்சி (அக். 10-14) மற்றும் புனே (அக். 19-23) ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறும், இது புதிதாக அமைக்கப்படுள்ள ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்னாப்பிரிக்காவிற்கு முதல் தொடராகும்தென்னாப்பிரிக்க - இந்திய தொடருக்கான 15 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிப்பு!! ஆல் ரவுண்டருக்கு இடமில்லை!! 3 புதிய வீரர்கள் அணியில்! 1.

டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி:

 

  1. ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்)
  2. டெம்பா பவுமா
  3. தியூனிஸ் டி ப்ரூயின்
  4. குயின்டன் டி கோக்
  5. டீன் எல்கர்
  6. ஜுபைர் ஹம்ஸா
  7. கேசவ் மகாராஜ்
  8. ஐடன் மார்க்ராம்
  9. செனுரன் முத்துசாமி
  10. லுங்கி என்ஜிடி
  11. அன்ரிச் நார்ட்ஜே
  12. வெர்னான் பிலாண்டர்
  13. டேன் பீடிட்
  14. ககிசோ ரபாடா
  15. ருடி செகன்ட்

தென்ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்ததால், அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை, 2023-ல் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான சிறந்த அணியை கட்டமைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விரும்பியது.தென்னாப்பிரிக்க - இந்திய தொடருக்கான 15 பேர் கொண்ட டெஸ்ட் அணி அறிவிப்பு!! ஆல் ரவுண்டருக்கு இடமில்லை!! 3 புதிய வீரர்கள் அணியில்! 2

அதன்படி டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டனாக மட்டும் டு பிளிசிஸ் தொடர முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் டி20 அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயின்டன் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிக்கு டெம்பா பவுமா துணைக் கேப்டனாகவும், டி20 அணிக்கு டஸ்சன் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டு பிளிசிஸ்

உலகக் கோப்பைக்குப் பின் தென்ஆப்பிரிக்கா அணி முதலாவதாக இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அப்போது டி காக் கேப்டனாக செயல்படுவார்.



  • SHARE

    விவரம் காண

    முடிந்ததா கோலியின் சகாப்தம்! 21 போட்டிகளில் சதமே இல்லை, டி20யில் 9வது இடம்! இன்னும் பல

    கிறைஸ்ட்சர்ச்சில் நடந்துவரும் நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் சோகம்...

    முக்கிய பந்துவீச்சாளர் காயம்! டெஸ்ட் தொடரில் இருந்து முற்றிலும் விலகல்!

    இலங்கை டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் இருந்து இடுப்புப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மார்க் வுட் விலகியுள்ளார். இங்கிலாந்து அணி இலங்கையில்...

    வீடியோ: 5 மாதத்திற்குப் பின் வந்து 4 சிக்சர்களை விரட்டிய ஹர்திக் பாண்டியா!

    காயத்திற்குப் பிறகு சுமார் ஐந்து மாதங்கள் கழித்து கிரிக்கெட்டில் களம் இறங்கிய ஹர்திக் பாண்ட்யா முதல் போட்டியிலேயே ஆல்-ரவுண்டர் பணியில் அசத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட்...

    டெஸ்ட் கிரிக்கெட் இல்லைனா இது இல்ல…! இத விட்ராதிங்கடா பசங்களா! அட்வைஸ் செய்யும் முதுபெறும் மனிதர் ரிச்சர்ட் ஹாட்லி!

    டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் இல்லாமல் டி20 போட்டிகள் நிலைத்து நிற்காது என்று நியூஸிலாந்து முன்னாள் பந்துவீச்சாளர்சர் ரிச்சர்ட் ஹாட்லி தெரிவித்தார். இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம்...

    வீடியோ: கிரிக்கெட் ஆடாத சமயத்தில் விவசாயியாக மாறிய தோனி!

    ராஞ்சியில் இயற்கை முறையில் தர்ப்பூசணி பயிரிடுவதற்கு விதைகளை நிலத்தில் விதைக்கும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, விவசாயத்தில் கால்பதித்தது நெகிழ்ச்சியாக...