இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான 15 பேர் கொண்ட டெஸ்ட் அணியில் தென்னாப்பிரிக்கா மூன்று அறிமுக வீரர்களை சேர்த்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களான அன்ரிச் நார்ட்ஜே மற்றும் கீப்பர் ரூடி செகண்ட்ஸ் மற்றும் ஸ்பின் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் செனுரன் முத்துசாமி ஆகியோர் முதல் முறையாக அழைப்புகளைப் பெற்றுள்ளனர். டேல் ஸ்டெய்ன் மற்றும் ஹாஷிம் அம்லா இல்லாத தென்னாப்பிரிக்காவின் முதல் டெஸ்ட் தொடராக இது இருக்கும்
தென் ஆப்பிரிக்கா டி20 தொடருடன் சுற்றுப்பயணத்தைத் தொடங்கும், இதில் முதலாவது போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி தர்மசாலாவில் நடக்க உள்ளது.
அதைத் தொடர்ந்து விசாகப்பட்டினம் (அக். 2-6), ராஞ்சி (அக். 10-14) மற்றும் புனே (அக். 19-23) ஆகிய இடங்களில் டெஸ்ட் போட்டிகள் நடைபெறும், இது புதிதாக அமைக்கப்படுள்ள ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தென்னாப்பிரிக்காவிற்கு முதல் தொடராகும்
டெஸ்ட் தொடருக்கான தென்னாப்பிரிக்கா அணி:
- ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்)
- டெம்பா பவுமா
- தியூனிஸ் டி ப்ரூயின்
- குயின்டன் டி கோக்
- டீன் எல்கர்
- ஜுபைர் ஹம்ஸா
- கேசவ் மகாராஜ்
- ஐடன் மார்க்ராம்
- செனுரன் முத்துசாமி
- லுங்கி என்ஜிடி
- அன்ரிச் நார்ட்ஜே
- வெர்னான் பிலாண்டர்
- டேன் பீடிட்
- ககிசோ ரபாடா
- ருடி செகன்ட்
தென்ஆப்பிரிக்கா அணி உலகக்கோப்பை தொடரில் படுதோல்வி அடைந்ததால், அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை, 2023-ல் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான சிறந்த அணியை கட்டமைக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் விரும்பியது.
அதன்படி டெஸ்ட் போட்டிக்கான அணியின் கேப்டனாக மட்டும் டு பிளிசிஸ் தொடர முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில் டி20 அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குயின்டன் டி காக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டிக்கு டெம்பா பவுமா துணைக் கேப்டனாகவும், டி20 அணிக்கு டஸ்சன் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டு பிளிசிஸ்
உலகக் கோப்பைக்குப் பின் தென்ஆப்பிரிக்கா அணி முதலாவதாக இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அப்போது டி காக் கேப்டனாக செயல்படுவார்.