2019ம் ஆண்டு ஐபிஎல் போட்டியை வேறு நாட்டில் நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. மேலும் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது ஐபிஎல் கமிட்டி.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வரும் கிரிக்கெட் திருவிழாவாக ஐபிஎல் தொடர் திகழ்கிறது.
சுமார் இரண்டு மாத காலம் நடைபெறும் இந்த போட்டிகளை கோடிக்கணக்கான மக்கள் நேரிலும், தொலைக்காட்சியிலும் பார்த்து ரசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், 2019ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளை வேறு நாட்டில் நடத்துவதற்கு ஐபிஎல் நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு நடைபெறும் 12வது ஐபிஎல் தொடர் போட்டிகளை மார்ச் 29 முதல் மே 19 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், அச்சமயத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக ஐபிஎல் வேறு நாட்டில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த 2009 மற்றும் 2014ம் ஆண்டு பொதுத்தேர்தல் நடந்தபோது தென்னாப்பிரிக்கா மற்று துபையில் ஐபிஎல் போட்டிகள் நடந்ததுள்ளது.
அதேபோல் அடுத்த ஆண்டும் தென் ஆப்பிரிக்காவில் இந்த போட்டி நடைபெற வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.
பொது தேர்தல், உலக கோப்பை போட்டி என அடுக்கடுக்கான நிகழ்வுகள் வரிசைக்கட்டி நிற்பதால், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை எங்கு, எப்போது நடத்துவது என்பது அறியாமல் பிசிசிஐ குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி-20 கிரிக்கெட் தொடர், இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 12-வது சீசனை எங்கு மற்றும் எப்போது நடத்துவது என்ற குழப்பத்தில் பிசிசிஐ சிக்கியுள்ளது. 2019-ம் ஆண்டு நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலுக்கான அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்னும் வெளியிடவில்லை. கால அட்டவணையை ஆராய்ந்த பின்னரே, பாதுகாப்பை கருத்தில் கொண்டு, எதிர்வரும் ஐபிஎல் தொடரை இந்தியாவில் நடத்துவதா? வெளிநாடுகளில் நடத்துவதா? என்ற இறுதி முடிவு எடுக்க முடியும்.
இதனிடையே, இங்கிலாந்தில் ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியான தகவலுக்கு, பெரும் பொருட்செலவு ஏற்படும் என கிரிக்கெட் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
மே 30-ம் தேதி இங்கிலாந்தில் உலகக்கோப்பை (50 ஓவர் ) தொடர் நடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாக ஐபிஎல் ., தொடரை முடிக்க வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது. இவ்வளவு பிரச்சனைகளையும் எதிர்கொண்டு ஐபிஎல் தொடரை வெற்றிகரமாக நடத்தினாலும், உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு மற்ற நாடுகளைச் சேர்ந்த வீரர்கள், ஐபிஎல் தொடரில் களமிறங்குவார்களா? என்பதும் பிபிசிஐ-க்கு சவாலான விஷயமே.
இவை அனைத்தும் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. இதனால் ஐபிஎல் 2019 தொடர் முழுவதும் தென்னாப்பிரிக்காய்வ்ல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது,.