இந்தியா – தென்னாப்பிரிக்கா : தொடரில் இருந்து விலகினார் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன் டெம்பா பவுமா
தென்னாப்பிரிக்க அணியின் மிடில் ஆடர் பேஸ்ட்மேன் டெம்பா பவுமா மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விளக்கியுள்ளார். ஏற்கனவே அவர் டி வில்லியர்சுக்கு மாற்றாக அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். காயத்தில் இருந்து மீண்டு வந்த டி வில்லியர்ஸ் மீண்டு அணியில் இடம் பிடித்து அபாராமாக ஆடினார். இதன் காரணமாக இவர் மீண்டும் உள்ளூர் முதல் தர போட்டிகளில் தனது அணிக்காக ஆட சென்றார்.

அவரது உள்ளூர் அணிக்காக அடிக்கொண்டிருந்த போது அவரது விரலில் பலத்த காயம் பட்டு உடைந்தது. இதன் காரணமாக மருத்துவமனைக்கு சென்று அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் அவருக்கு மேட்ச் பிட்னஸ் இல்லை என மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவரை விலக்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் மொமண்டம் ஒருநாள் கோப்பையில் கேப் கோப்ராஸ் அணிக்காக ஆடி வரும் பவுமா அந்த அணிக்காக ஆடும் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இந்த அணியை ஜே.பி டுமினி வழிநடத்துகிறார்.