மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரகானே களம் காணப்போகிறார்
இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கேப் டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 72 ரன்கள் வித்தியாசத்திலும், செஞ்சூரியனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்திலும் தோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது.

Photo by Deepak Malik / BCCI / Sportzpics
இந்திய அணியின் துணை கேப்டன் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை என்பதை நம்ப முடிகிறதா.? ஒரு அணியின் துணை கேப்டனாக இருக்கும் ஓரி வீரர் அந்த அணியின் முக்கியமான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவில்லை. அந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி தோற்றுவிட்டது. மேலும், இத்தனைக்கும் வெளிநாட்டு தொடர்களில் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ராகனே தான்.
ரோகித் சர்மா பார்மில் இருக்கிறார் என்ற காரணத்திற்காக ராகனேவுக்கு பதில் மிடில் ஆடரில் ரோகித்தை இறக்கி விசப்பரிட்சை செய்தார் கோலி. ஆனால், அந்த முயற்சி முற்றிலுமாக தோல்வியில் முடிந்தது. ரோகித்தும் ரன் அடிக்கவில்லை
இந்திய அணி வீரர்கள் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற இருக்கும் ஜோகன்னஸ்பர்க் மைதானத்தில் பயிற்சியை மேற்கொண்டனர்.
தற்போது மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி கடுமையாக பயிற்சி செய்து வருகிறது. எப்போதும் தனியாக பயிற்சி பெறும் ராகானே இந்த முறை விராட் கோலியின் உடன் சென்று ஹர்திக் பாண்டியா மற்றும் கோலியுயுடன் சேர்ந்தது பயிற்சி செய்தார், மேலும், பயிற்சி நேரம் முடிந்த பின்னும் கூட கோலியும் ரகானேவும் ஒரு மணி நேரம் சேர்ந்து பயிற்சி பெற்றனர். இதனை பார்க்கும் போது மீண்டும் ராகனே அணியில் களம் இறங்குவார் என தெரிகிறது.