SOUTHAMPTON, ENGLAND - JUNE 10: Faf Du Plessis of South Africa looks on during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between South Africa and West Indies at The Ageas Bowl on June 10, 2019 in Southampton, England. (Photo by Harry Trump-IDI/IDI via Getty Images)

இண்டீஸ் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டு உள்ளது.

தென்ஆப்பிரிக்கா தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனை அடுத்து இன்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாய நிலையில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆம்லா 6 ரன்களிலும் அதனையடுத்து மார்க்கம் 5 ரன்களிலும் அவுட் ஆனதால் 7.3 ஓவர்களில் தென்னாபிரிக்கா அணி 29 ரன்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

சோதனை மேல் சோதனை: மீண்டும் மழையால் கைவிடப்பட்ட போட்டி 1
SOUTHAMPTON, ENGLAND – JUNE 10: Sheldon Cottrell of West Indies celebrates taking the wicket of Hashim Amla of South Africa during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between South Africa and West Indies at The Hampshire Bowl on June 10, 2019 in Southampton, England. (Photo by Alex Davidson/Getty Images)

இந்நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து நிண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டது என நடுவர்கள் அறிவித்தனர். எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டி ரத்தானதால் தென் ஆப்பிரிக்கா தனது முதல் புள்ளியை பெற்று உள்ளது. ஏற்கனவே இதே தொடரில் இலங்கை-பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து நடைபெறும் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே தென் ஆப்பிரிக்கா அணி அரையிறுதி ஆட்டத்தில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ற்கெனவே 3 போட்டிகளில் தொடர் தோல்வி அடைந்துள்ள தென்னாப்பிரிக்கா அணிக்கு இது பின்னடைவாக அமைந்தது.

சோதனை மேல் சோதனை: மீண்டும் மழையால் கைவிடப்பட்ட போட்டி 2

போட்டி மழையால் ரத்தானது தொடர்பாக பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸ், “மழை போட்டியை பாதித்தது மோசமானது. இரண்டு அணிகளும் ஒரு முடிவை எதிர்பார்த்தோம். ஆனால் எங்களால் வானிலையை கட்டுப்படுத்த முடியவில்லை. தொடக்கத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை இன்று (நேற்று) இழந்ததுபோல இல்லாமல், ஒரு நாள் விளையாட்டை தொடங்க வேண்டும். வெஸ்ட் இண்டீஸில் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இந்த இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டனர்.

 

அதிக போட்டிகளில் இரண்டாவது பேட்டிங்கின் போது மழை வரும். அதனால் போட்டி 30 அல்லது 35 ஓவர்களாக குறைக்கப்பட்டு முடிவு பெறும். ஆனால் இன்று அப்படிக்கூட எதுவும் நடக்கவில்லை. லுங்கி நிகிடி அடுத்த போட்டியில் தயார் ஆகிவிடுவார். அடுத்த போட்டி எங்களுக்கு மிக முக்கியம் வாய்ந்த போட்டி என்பதால் வலிமையான பவுலிங்குடன் களமிறங்குவோம்” என்று தெரிவித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *