தென்ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ஜோகன் போத்தாதற்போது அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்துள்ளார் தற்போது ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஸ் கிரிக்கெட் லீக் தொடரில் ஆடிவரும் அவர் இந்த முடிவை அறிவித்துள்ளார் ..
அந்த தொடரில் ஹோபார்ட் ஹரிகேண்ஸ் அணிக்காக ஆடி வரும் அவர் தனது உடல்நிலை காரணமாகவும் அவரது உடல் இதற்குமேல் விளையாட முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறி இந்த ஓய்வை அறிவித்துள்ளார் தற்போது 36 வயதான அவர் 78 ஒருநாள் போட்டிகளில் தென்னாப்பிரிக்கா ஆடியுள்ளார் இவற்றில் 608 ரன்களும் 78 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.
மேலும் 47 சர்வதேச டி20 போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணிக்காக ஆடியுள்ளார். அவர்கள் 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடைசியாக 2012ஆம் ஆண்டு அவர் ஆடினார். 2012ஆம் ஆண்டு நடைபெற்ற 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது இதன் காரணமாக அவர் அதன் பின்னர் தென் ஆப்பிரிக்க அணிக்கு ஆட முடியவில்லை.
மேலும் 2016இல் தென்னாப்பிரிக்க நாட்டில் இருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவுக்குச் சென்று ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்று தற்போது உலகில் உள்ள அனைத்து 20 தொடரிலும் ஆடிவருகிறார். இதற்கு முன்னதாக இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், மற்றும் கொல்கத்தாவில் ஆடியுள்ளார்

மேலும் கடந்த 2005ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார் மொத்தம் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளா.ர் அவர் மேலும் ஆல்ரவுண்டரான இவர் பத்துமுறை தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இருந்துள்ளார். இவரது காலகட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை 2009ஆம் ஆண்டு அதன் சொந்த மண்ணிலேயே ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று நம்பர் ஒன் இடத்தை அடைந்தார். மேலும் 11 போட்டிகளில் சர்வதேச டி20 தென்னாப்பிரிக்க அணியை வழி நடத்தினார். தற்போது வரை 215 20 ஓவர் போட்டிகளில் கடந்த 15 வருடங்களாக ஆடி வருகிறார். தற்போது அவரது மனைவி 15 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.