டெஸ்ட் தரவரிசை, விராட் இரண்டாம் இடம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 322 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கேப்டவுனில் நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 311 ரன்களும், ஆஸ்திரேலிய அணி 255 ரன்களும் எடுத்தன. தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 373 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்க்ரம் 84 ரன்களும், குயிண்டன் டி காக் 65 ரன்களும் எடுத்தனர்.

ஆஸ்திரேலிய தரப்பில் ஹேசில்வுட், கம்மின்ஸ், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் லயனின் டெஸ்ட் விக்கெட் எண்ணிக்கை 301 ஆக உயர்ந்தது. 77 டெஸ்ட்டில் விளையாடியுள்ள லியான் இந்த மைல்கல்லை எட்டினார். இதன் மூலம் 300-க்கு மேல் விக்கெட்டுகளை வீழ்த்திய 6-வது ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் என்ற சிறப்பையும் பெற்றார்.

430 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சால் 107 ரன்களுக்கு சுருண்டது. மோர்னே மோர்கல் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
டெஸ்ட் – பேட்ஸ்மேன்
- ஸ்டிவ் ஸ்மித்
- விராட் கோலி
- கென் வில்லியம்சன்
- ஜோ ரூட்
- டேவிட் வார்னர்
- ஏபி டி வில்லியர்ஸ்
- புஜாரா
- டீன் எல்கேர்
- அசார் அலி
- ஹசிம் அம்லா
டெஸ்ட் – பந்து வீச்சாளர்
- ககிசோ ரபடா
- ஜேம்ஸ் ஆண்டர்சன்
- ரவீந்தர ஜடேஜா
- ஆர் அஸ்வின்
- ஜோஷ் ஹேசலவுட்
- மோர்னே மோர்கள்
- ட்ரெண்ட் போல்ட்
- நெய்ல் வாக்னர்
- ரங்கனா ஹெராத்
- வெரோன் பிலாண்டர்

டெஸ்ட் – ஆல் ரவுண்டர்
- ஷகிப் அல் ஹசன்
- ஜடேஜா
- அஸ்வின்
- பென் ஸ்டோக்ஸ்
- வேரின் பிலாண்டர்