தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீராங்கனைகள் எலிசி தியுனிசன் கார் விபத்தில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு தற்போது 25 வயது மட்டுமே ஆகிறது. இவருடன் காரில் பயணம் செய்த நால்வரும் இறந்துள்ளனர் .மேலும் இவரது ஒரு வயதுக் குழந்தையும் அந்த விபத்தில் பலியாகி மரணமடைந்துள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் ஆடியுள்ளார் அவர். மேலும் கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரிலும் இவர் பங்கேற்றுள்ளார். இந்த மரணம் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மேலும் உலக கிரிக்கெட்டின் இந்த மரணம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த மரணம் குறித்து தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய செயலாளர் பேசியதாவது..
இது ஒரு மோசமான கோர நிகழ்வாகும். இதனை யாரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு வந்து சேர்ந்த மிகவும் மோசமான செய்தியாகும். வட கிழக்கு மாகாணத்திற்கான கிளப் கிரிக்கெட் ஆடி வந்த அவர் தற்போது இளம் வீராங்கனைகள் பயிற்சி பயிற்சி கொடுத்து வந்துள்ளார். இது குறித்து பேசிய கேட்க செயலர் பேசியதாவது..
#CSAnews CSA shocked by tragic passing of Elriesa Theunissen-Fourie https://t.co/TiMQMFroCf #RIPElriesa pic.twitter.com/n0yRIs5uJR
— Cricket South Africa (@OfficialCSA) April 6, 2019
கிரிக்கெட் நிர்வாகத்திற்கு அவர் பல உதவிகளை செய்துள்ளார். அவர் வாழும் வரையில் தேசிய வீராங்கனைகளுக்கும் உள்ளூர் வீராங்கனைகளுக்கும் தன்னால் முடிந்த அனைத்து வகையான சேவைகளையும் செய்தார். தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் அவருடைய கணவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் மற்றும் கிரிக்கெட் உலகத்திற்கும் நாங்கள் வருத்தத்தில் தெரிவிக்கிறோம் என்று பேசியுள்ளார் அவர்.
தென்னாப்பிரிக்காவின் தலைமை நிர்வாகி தபாங் மொரோயி கூறுகையில், “இது மிகவும் வேதனையான விபத்து. இந்த செய்தி அனைவருக்கும் நாங்கள் மகிழ்ச்சியல்ல. CSA குடும்பத்தின் சார்பில், நான் என் கணவர், குடும்பம், நண்பர்களுக்கு என் இரங்கலை தெரிவிக்கிறேன். ‘
Elriesa Theunissen-Fourie, who played three ODIs and one T20I for South Africa, has tragically died at the age of 25. May she rest in peace.https://t.co/8bM0ECMSJZ
— ICC (@ICC) April 7, 2019