ஐபிஎல் தொடரின் 31-வது ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முதலில் பேட்டிங் செய்தது. குயின்டான் டி காக் – மனன் வோரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி, 20 ஓவரில் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் சேர்த்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. பெங்களூர் அணியில் மனம் வோரா 45 ரன்களும், மெக்கல்லம் 37 ரன்களும், விராட் கோலி 32 ரன்களும் எடுத்தனர். மும்பை அணி பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்கள் வீழ்த்தினார்.

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் களமிறங்கினர். இஷான் கிஷான் சவுத்தி ஓவரில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆனார். அதன்பின் டுமினி களமிறங்கினார். சூர்யகுமார் யாதவ் 9 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அவரைத்தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரோகித் சர்மா உமேஷ் யாதவ் பந்தில் டக் அவுட் ஆனார். அதன்பின் பொலார்ட் களமிறங்கினார். அவர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி வந்த டுமினி 23 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது மும்பை அணி 12 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் ஹர்திக் பாண்டியா – குருணல் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர்.

இருவரும் பொறுப்புடன் விளையாடினர். குருணல் பாண்டியா 23 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய ஹர்திக் பாண்டியா அரைசதம் அடித்தார். கடைசி ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 25 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்தார்.
மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பெங்களூரு அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி பந்துவீச்சில் சவுத்தி, உமேஷ் யாதவ், சிராஞ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.