பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் அவரின் குடும்பத்தின் சமீபத்திய போட்டோக்கள், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவின் திருமணத்தை உறுதிப்படுத்தியது. அனுஷ்கா சர்மா, அவரின் தாய், அவரின் தந்தை மற்றும் அவரின் சகோதரர் ஆகியோர் மும்பை விமான நிலையத்தில் வியாழக்கிழமை இரவு இருந்தார்கள்.
அனுஷ்கா ஷர்மாவின் குடும்பத்தை பற்றி பத்திரிகையாளர்கள் ஆராய்ந்து வந்த நிலையில், மும்பையில் உள்ள சத்ராபதி சிவாஜி விமான நிலையத்தில் அவர்கள் வியாழக்கிழமை இரவு இருந்தார்கள். அனுஷ்கா ஷர்மாவின் குடும்பம் வேறு எங்காவது போகிறதா என்று தெரியவில்லை, ஆனால் கேப்டன் விராட் கோலிக்கும் அனுஷ்கா ஷர்மாவின் திருமணத்திற்கு தான் செல்கிறார்கள் என தகவல் வந்துள்ளது.
கடந்த ஒரு வருடமாக டிசம்பர் மாதம் இந்தியாவின் கேப்டன் விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவிற்கும் இத்தாலியில் திருமணம் என தகவல்கள் வந்தன. தனது நீண்ட நாள் காதலியை டிசம்பர் 9, 10, 11 மற்றும் 12ஆம் தேதியில் ஏதாவது ஒருநாள் விராட் கோலி திருமணம் செய்வார் என தகவல் வந்தன.
திருமணத்திற்காக விராட் கோலியின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் தற்போது இத்தாலியில் இருக்கிறார்கள் என தகவல் வந்துள்ளது. அவர்களின் திருமணம் மிலானில் நடக்கும் மற்றும் அவர் இதுவரை எந்த கிரிக்கெட் வீரரையும் தனது திருமணத்திற்கு அழைக்கவில்லை.
The third Test cricket match between India and Sri Lanka starts in Pallekele on August 12. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)
“எனக்கும் ஒன்றும் தெரியாது. நான் என்ன செய்யவேண்டும் எப்படி இருக்க வேண்டும் என அனைத்தும் கற்றுக்கொடுத்தது அனுஷ்கா சர்மா தான். நான் பார்மில் இல்லாத போது, என்னுடைய கடினமான நேரத்தில் உதவியாக இருந்தார். பிறகு நான் ரன் அடிக்க தொடங்கினேன். எங்கள் இருவருக்கும் இது ஒரு சிறப்பான விஷயம்,” என விராட் கோலி அனுஷ்கா ஷர்மாவை பற்றி சமீபத்தில் நடநத ஒரு நிகழிச்சியில் கூறினார்.