இந்திய ஒருநாள் அணி : விராட் கோலி(கேப்டன்) , சிகர் தவான் , அஜிங்கயா ரகானே, லோகேஷ் ராகுல், ரோகித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், மனீஷ் பாண்டே, மகேந்திர சிங் தோனி (விக்கெட் கீப்பர்) , கேடர் ஜாதவ், அக்சர் படேல் , குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரிட் பும்ரா,ஸரடுல் தகூர், யுஜவேந்திர சகால்
இந்திய இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிந்தவுடன் 5 ஒரு நாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.
மூன்றாவது டெஸ்ட் போட்டி 18 ஆம் தேதி முடிவடைகிறது. அதனை தொடர்ந்து 20 ஆம் தேதி முதல் ஒரு நாள் மற்றும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடக்கிறது. அதற்கான உத்தேச அணி பல சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.மேலும் இரு வகையிளான போட்டிகளுக்கும் புதிய கேப்டனை நியமிக்கப் போவதாக தெரிகிறது.
ரோஹித் ஷர்மாவிற்க்கு வாய்ப்புகள் அதிகம் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தது. மேலும் விராட் கோலி கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் முதல் அனைத்து இந்திய போட்டிகளிலிம் ஓய்வில்லாமல் விளையாடி வரும் அவருக்கு சிறிது ஓய்வு கொடுக்க இந்திய கிரிகெட் கட்டுப் பாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
ஆனால், கோலியோ நான் ஒருநாள் தொடரில் இருப்பேன் மற்றும் நான் இருக்க மாட்டேன் என்ற தகவல்கள் எங்கிருந்து வருகின்றது என அவருக்கே தெரியவில்லை என்று கூறினார். கோலியும் இடம் பெற வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது.
16ஆம் தேதி டெஸ்ட் தொடர் முடிந்தவுடன் இந்தியாவின் ஒருநாள் தொடர் ஆரம்பம் ஆகவுள்ளது. சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்தியா இறுதி போட்டியில் தோற்றிருந்தாலும் தற்போது உள்ள ஒருநாள் அணியின் முதல் மூன்று பேட்ஸ் மேன்களே எந்த இந்த இலக்கையும் அடித்து துவம்சம் செய்யும் அளவுக்கு திறமைசாளிகள்.
இம்மாதிரியான இந்திய அணியுடன் மோதிப் போகும் இலங்கை அணி தப்பிக்குமா இல்லை எதிர்த்துப் போராடுமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.