இலங்கை கேப்டன் பொருப்பில் மியுசிக்கள் சேர்: சண்டிமால் கேப்டனாக நியமனம்!! 1

இலங்கை அணி கடந்த சில வருடங்களாக படு பாதாளத்திற்கு சென்று வருகிறது. அந்த அணியின் முக்கிய வீரர்களான திலகரத்னே தில்ஷன், குமார சங்கக்கார, மஹேல ஜெயவர்த்தன போன்றவர்கள் ஓய்வு பெற்றவுடன் அந்த அணிக்கு சரியான வீரர்கள் கிடைக்காமல் மேலும் மேலும் அடி வாங்கி வருகிறது. கடந்த மூன்று வருடங்களில் 40 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள அந்த அணி 31-இல் தோல்வியை மட்டுமே தழுவியுள்ளது. இதனால் அந்த அணி மீண்டும் மீண்டும் கேப்டனை மாற்றியும் வீரர்களை மாற்றியும் செய்முறை செய்து வந்தது. இந்த எதுவுமே பலனளிக்காமல் மீண்டும் கேப்டன் பொறுப்பில் மியூசிக்கல் சேர் ஆடி வருகிறது.

இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கேப்டன் பொருப்பில் மியுசிக்கள் சேர்: சண்டிமால் கேப்டனாக நியமனம்!! 2
Sri Lankan cricketer Dinesh Chandimal walks with his equipment during a practice session at the R.Premadasa Stadium in Colombo on March 15, 2018.

இலங்கை கிரிக்கெட் அணி, கடந்த சில வருடங்களாக மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது. கடந்த வருடத்தில் மட்டும் மூன்று முறை, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர்களில் படுதோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து அந்த அணியின் கேப்டன்கள் அடிக்கடி மாற்றப்பட்டு வருகின்றனர். தொடர் தோல்வி காரணமாக கேப்டான இருந்த மேத்யூஸ் பதவி விலகினார்.

இதனால், இந்திய- இலங்கை மோதிய ஒரு நாள் போட்டித் தொடருக்கு ஆல்ரவுண்டர் திசாரா பெரேரா கேப்டனாக நியமிக்கப்பட்டார். இருந்தும் அந்த அணி படு தோல்வி அடைந்தது. பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பாகிஸ்தானுடன் நடந்த டெஸ்ட் தொடரை வென்ற அந்த அணி, ஒரு நாள் மற்றும் டி20 தொடர்களில் பரிதாபமாகத் தோற்றது. இந்தியாவில் நடந்த தொடரிலும் தோல்வியை தழுவியது. இதையடுத்து ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் திசாரா பெரேரா நீக்கப்பட்டார்.இலங்கை கேப்டன் பொருப்பில் மியுசிக்கள் சேர்: சண்டிமால் கேப்டனாக நியமனம்!! 3

 

இதையடுத்து கேப்டன் பொறுப்பை விட்டு விலகிய மேத்யூஸை மீண்டும் கேப்டனாக நியமித்தனர். இதுபற்றி மேத்யூஸ் கூறும்போது, ‘இலங் கை கிரிக்கெட் வாரிய தலைவரும் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஹதுருசிங்காவும் பேசினர். என் முடிவை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். அதனால் கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுக்கொண்டேன்’ என்று கூறியிருந்தார்.

இவர் தலைமையிலும் இலங்கை அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தது. சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பைத் தொடரில் லீக் போட்டியிலேயே அந்த அணி வெளியேறியது. இதையடுத்து அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மேத்யூஸ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, டெஸ்ட் அணி கேப்டன் சண்டிமால் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Rajeshwaran Naveen

Cricket Fan - Dhoni Lover - CSK Forever

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *