ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடருக்கான 18 நபர்களை கொண்ட இலங்கை அணி வெளியிடப்பட்டுள்ளது .
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய அணி 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி உள்ளது இதன் முதல் போட்டி வருகிற ஜூன் 7-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த தொடர் எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான ஒரு பயிற்சி ஆட்டமாக இருப்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் மிகவும் முக்கியமானதாக உள்ளது, இதனால் இந்த தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆரோன் பின்ஞ் தலைமையிலான பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ள இலங்கை அணி, 18 நபர்களை கொண்ட இலங்கை ஸ்குவாடை வெளியிட்டுள்ளது.
தசுன் சனாகா தலைமையிலான இலங்கை அணியில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட பணுகா ராஜபக்சே, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்சனா மற்றும் பேபி மலிங்கா என்று பரட்டை பெற்ற மதிஷா பதிரனா ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அனைத்தும் முன்னேற்பாடுகளும் சிறப்பாக உள்ளது…
இலங்கையில் ஏற்கனவே அரசியல் சிக்கல்கள் அதிகமாக இருப்பதால் இந்த தொடர் எப்போது நடைபெறும் என்பது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரும் கேள்விக்குறியாக உள்ளது.
இந்த நிலையில் ரசிகர்களின் அந்த அச்சத்தைப் போக்கும் வகையில், இந்த தொடர் குறித்து இலங்கை அணியின் நிர்வாகி ஒருவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார், “இரண்டு நாடுகளின் ஒப்புதலுடன் இந்த தொடர் நடைபெற உள்ளது, இந்த தொடருக்கான முன்னேற்பாடுகள் நல்ல நிலைமையில் உள்ளது, திட்டத்தில் எந்த ஒரு மாற்றமும் இருக்காது, ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் 3 டி20 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் விளையாடுவதற்காக இன்று மதியம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். மேலும் இந்த தொடர் எதிர்வரும் உலக கோப்பை தொடருக்கான ஒரு முன்னேற்பாடாக உள்ளது, மேலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இலங்கை அணி சிறந்த வீரர்களை உள்ளடக்கியது என்ற பாராட்டைப் பெற்றுள்ளது,மேலும் இந்த தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெறும் என்றும் அந்த நிர்வாகி பேசியிருந்தார்.
18 வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணி…
தசுன் சனாக(c),பதும் நிஸ்ஸாங்க, தனுஷ்கா குணதிலகா,குசால் மென்டிஸ்,சரித் அஸ்லங்கா,பணுகா ராஜபக்சே, நுவனிந்து பெர்னாண்டோ,லஹிரு மதுசங்கா, வனிந்து ஹசரங்கா, சமிகா கருநாரத்நே, துஸ்மந்தா சமிரா,கசுன் ரஜிதா, நுவன் துஷாரா, மதீஷா பதிரனா, ரமேஷ் மென்டிஸ், மஹீஷ் தீக்சனா, பிரவீன் ஜயவிக்ரமா, லக்சன் சண்டகன்.