பல்லேகலேவில் மழை காரணத்தினால் இந்திய அணியின் பயிற்சி நேரம் பாதிக்கப்பட்டது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்குகிறது. இதனால், அந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பயிற்சி நேரம் மழை குறிக்கிட்டதால் வீணாகியது. இதனால், இந்திய அணி பயிற்சி இல்லாமல், நேராக மூன்றாவது டெஸ்ட் போட்டியை விளையாடவுள்ளது.
தற்போது இந்திய இலங்கைக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று 2 – 0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்க, மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் வெல்ல முனைப்புடன் உள்ளது.
மழை பெய்ததால், மீண்டும் இந்திய அணியின் கேப்டனுக்கு தலைவலி. மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு அக்சர் பட்டேலை இந்திய அணி அழைத்தது, ஆனால் இப்போது மழை பெய்ததால், அக்சர் பட்டேல் விளையாடுவாரா, விளையாடமாட்டாரா? என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு அணியும் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணியை ஆகஸ்ட் 13ஆம் தேதி அறிவிப்பார்கள் என தகவல்கள் வந்துள்ளது.
தொடர்ந்து விளையாடுவதால், விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு கொடுத்து, பும்ரா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்திய அணியில் இடம் பிடிப்பார்கள் என எதிர்பார்க்க படுகிறது. மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக அமித் மிஸ்ரா பெயரை சேர்க்க வாய்ப்புள்ளது.