உடல்நிலை குறைவினால் கே எல் ராகுல் இந்தியா மற்றும் இலங்கை -கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகல் 1

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் காயம்’ காரணமாக இந்தியா மற்றும் இலங்கை மோதும் முதலாவது டெஸ்ட் இல் இருந்து விலகல்.

இந்தியா மற்றும் இலங்கை அணிக்கு இடையான 3 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 26 கல்லே-இல் தொடங்குகிறது இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் காயம்’ காரணமாக முதல் டெஸ்டில் பங்கேற்கமாட்டார் . இது அந்த அணிக்கு மிகவும் பேரடியாக அமைந்தது . இந்தியா சுற்றுப்பயணமாக இலங்கைக்கு செல்லும் இந்த தொடரில் 3 டெஸ்ட் உட்பட 5 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 1 டி 20 போட்டியும் விளையாடுகிறார்கள் .

ராகுல் திங்கள்கிழமை வலை பயிற்சி -இல் பங்கேற்கவில்லை . பிசிசிஐ ராகுல் -இக்கு ஆலோசனை வழங்கியுள்ளது , முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வேண்டாம் எனவும் , ஓய்வு எடுக்கவும் பரிந்துரைக்க பட்டிருக்கிறார் .

இதற்கு முன்னால் , காயம் காரணமாக சாம்பியன்ஸ் ட்ரோபி மற்றும் ஐபில் தொடரில் ராகுல் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிட தக்கது . இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா -இக்கு இடையலான தொடரில் ராகுல் சிறப்பாக விளையாடி , இந்திய அணி 2-1 என தொடரை வெல்ல பெரும் பங்காக அமைந்தார் . அந்த தொடரில் ராகுல் தான் அதிக ரன் -கள் எடுத்தவர்கள் பட்டியலில் 3 வது இடம் .

கே எல் ராகுல் இந்திய அணிக்கு மிகவும் வெற்றிகரமான தொடக்க வீரராக செயல் பட்டு வந்தார் . சாம்பியன்ஸ் ட்ரோபி தொடரில் ராகுல் விளையாடாத காரணத்தில் இடக்கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான் விளையாடினர் . ராகுல் 3 விதமான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வந்தார் . காயம் காரணமாக அவர் தனது இடத்தை இழந்துள்ளார் . ஒரு நாள் தொடரில் ஷிகர் தவான் தனது சிறப்பான ஆட்டத்தால் நிரப்பி உள்ளார் . எனவே நேரடியாக ஒரு நாள் தொடரில் ராகுல் பங்கேற்பது சந்தேகமாகவே உள்ளது .

டெஸ்ட் தொடரை பொறுத்த மட்டில் இதுவரை தொடக்க ஆட்டக்காரர்கள் யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை . தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் -உம் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிட தக்கது .

The man who changed his passion into reality.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *