கோலி கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, அதற்கும் மேல்: இலங்கை ரசிகர்

சமீபத்தில் நடந்த விராத் கோலி-அனுஷ்கா திருமண வரவேற்பில் பங்கேற்ற இலங்கை ரசிகர் கயான் சேனநாயக், விராத்கோலி மனிதநேயமிக்கவர் என்று புகழ்ந்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியும், நடிகை அனுஷ்காவும் சில வாரங்களுக்கு முன் இத்தாலியில் திருமணம் செய்துகொண்டனர். இதில் அவர்களின் நெருங்கிய நண்பர்களும், உறவினர்களும் கலந்துகொண்டனர்.

Indian skipper Virat Kohi (L) and Bollywood actress Anushka Sharma (R) married together on December 13, 2017 in Italy.

இதையடுத்து டெல்லியிலும், மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது. டெல்லியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் பங்கேற்றனர்.

இந்நிலையில், மும்பையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், இலங்கை அணியின் தீவிர ரசிகரான கயான் சேனநாயக்கும் பங்கேற்றார். பிரபலங்கள் நிறைந்த நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் அழைக்கப்பட்டது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

இதுகுறித்து பதிலளித்த இலங்கை ரசிகர் கயான், “விராட் கோலி வாட்ஸ் அப் மூலம் எனக்கு வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை அனுப்பினார். பிரபலங்கள் மட்டுமே பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரே ரசிகன் நான் மட்டுமே.விராட் கோலி கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, நல்ல மனிதநேயம் மிக்கவர்” என்று புகழ்ந்துள்ளார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.