சாகித் அப்ரிடி. அதிரடிக்குப் பெயர் போன சுழற்ப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர். தற்போது அதிகாரப்பூர்வமாக தனக்கு, தன்னுடைய ஓய்விற்க்குக் கொடுக்கப்பட்ட பிரியாவிடையை ஏற்றுக் கொண்டுள்ளார்.
அவர் ஓய்வை அறிவித்தபின் அவருக்கு பிரியா விடை கொடுத்து உபசரிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பலமுறை அனுகியும் அவர் அதனை ஏதோ சில காரணங்களுக்காக மறுத்து வந்தார்.
தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வரியம் கொடுத்த பிரியா விடையை ஏற்று அந்த கிரிக்கெட் வாரியத்திற்க்கு நன்றியை செலுத்தியுள்ளார்.
ஆனால், சற்று சிக்கலான ஆள் இவர். திடீரென்று ஓவை அற்விப்பதும், பின்னர் நினைத்தால் திடீரென்று ஓவை ரத்து செய்வதும் இவருக்கு வாடிக்கியான ஒன்றாகும்.
அதன் காரணமாகவே, வலுக்கட்டயமாக இவரை ஒரே அடியாக ஓய்வு கொடுத்து அனுப்பிவிட முடிவு செய்து தான் அவருக்கு தாமாக முன்வந்து பிரியாவிடை கொடுத்து அனுப்பியுள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
கிட்டத்தட்ட 20 வருடங்கள் பாகிஸ்தான் அணிக்காக ஆடியுள்ளார் சாகித் அப்ரிடி. தற்போது அவருக்கு 37 வயதாகிறது.
நேற்று முடிவடைந்த உலக 11 மற்றும் பாகிஸ்தான் அணிகலுக்கான டி20 தொடரின் இருதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை ஏற்று கடாபி மைதானத்திற்கு வந்தார் அப்ரிடி.
அப்போது போட்டியின் இறுதியில் அவருக்கு பிரியா விடிய கொடுக்கப்பட்டது. அதனை அவரும் ஏற்று, தனது ரசிகர்களுக்கு உற்ச்சாகமூட்டி வெளியேறினார்.
அந்த காட்சி கீழே :
பாகிஸ்தானுக்காக 398 ஒருநாள் போட்டிகளிலும், 98 டி20 போட்டிகளிலிம், 27 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியுள்ளார் சாகித் அப்ரிடி.
அதில் அனைத்து பார்மட்களிலும் சேர்த்து 540 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டிகளில் 8064 ரன்களும் அடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் 1716 ரன்னும், டி20 போட்டிகளில் 1404 ரன்னும் அடித்துள்ளார் அப்ரிடி.