நடைபெற்று வரும் ஐசிசி உலகக்கோப்பை 2019-ஐ ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மூலம் ரசித்த பார்வையாளர்கள் எண்ணிக்கை முதல் வாரத்தில் மட்டும் 269 மில்லியன்கள் என்று ஸ்டார் நெட்வொர்க் அறிவித்துள்ளது.
ஐசிசி தொடர்களிலேயே சாதனை படைக்கும் விதமாக முதல் வாரத்தில் மட்டும் சராசரியாக 107.2 மில்லியன் இம்ப்ரஷன்கள் பதிவாகியுள்ளன.
ஜூன் 5ம் தேதி இந்தியா-தென் ஆப்பிரிக்கா போட்டியை மட்டும் தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் எண்ணிக்கை 180 மில்லியன்களாகும்.
உயர்மட்ட மார்க்கெட்டிங் உத்திகள், புதிய மார்க்கெட்டிங் வழிமுறைகள் ஆகியவற்றினால் இந்தச் சாதனைப் பார்வையாளர்களைக் கொண்டு வர முடிந்ததாக ஸ்டார் நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
மேலும்,
10 அணிகள் இடையிலான 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
தொடரின் 18-வது லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நாட்டிங்காமில் மோதுவதாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்தது போலவே நாட்டிங்காமில் மழை வெளுத்து வாங்கியது. ‘டாஸ்’ போடுவதற்கு முன்பே மழை புகுந்து விளையாடியதால் வீரர்களும், குழுமியிருந்த ரசிகர்களும் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தொடர்ந்து பெய்த மழையால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. 5½ மணி நேர காத்திருப்புக்கு பிறகு மறுபடியும் ஆய்வு செய்த நடுவர்கள், விளையாடுவதற்கு உகந்த வகையில் மைதானம் இல்லை என்று கூறி இந்த ஆட்டத்தை கைவிடுவதாக அறிவித்தனர்.

இதையடுத்து இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டன. நடப்பு தொடரில் மழையால் ரத்தான 4-வது ஆட்டம் இதுவாகும். ஏற்கனவே பாகிஸ்தான்-இலங்கை, வெஸ்ட் இண்டீஸ்-தென்ஆப்பிரிக்கா, இலங்கை-வங்காளதேசம் அணிகள் இடையிலான ஆட்டமும் மழையால் கைவிடப்பட்டது. இதற்கு முன்பு உலக கோப்பை தொடர்களில் 2 ஆட்டத்திற்கு மேல் ரத்தானதில்லை. ஆனால் இந்த முறை மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது.