கவாஸ்கர் சாதனையை காலி செய்த ஸ்டீவ் ஸ்மித்! அடுத்தடுத்து நொருக்கும் அசுரன்! 1

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் 5-ஆவது டெஸ்டில் 135 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 2-2 என தொடரையும் சமன் செய்தது இங்கிலாந்து.

இரு அணிகளுக்கு இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஆஷஸ் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. ஆஸி. 2 ஆட்டத்திலும் இங்கிலாந்து 1 ஆட்டத்திலும் வென்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆஷஸ் கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், இறுதி டெஸ்ட் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.

கடைசி இன்னிங்ஸில், 399 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி,  77 ஓவர்களில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்த வெற்றி மூலம் தொடரையும் 2-2 என சமன் செய்தது இங்கிலாந்து. தொடர் நாயகனாக ஸ்மித்தும், ஆட்ட நாயகனாக ஆர்ச்சரும் தேர்வு பெற்றனர்.கவாஸ்கர் சாதனையை காலி செய்த ஸ்டீவ் ஸ்மித்! அடுத்தடுத்து நொருக்கும் அசுரன்! 2

இந்த ஆஷஸ் தொடரில் 4 டெஸ்டுகளில் பங்கேற்ற ஸ்மித், 774 ரன்கள் எடுத்து கவாஸ்கரின் சாதனையைச் சமன் செய்துள்ளார். கவாஸ்கர் தனது முதல் தொடரிலேயே பலம் வாய்ந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 774 ரன்கள் குவித்தார்.

ஒரு தொடரில் 4 டெஸ்ட்டுகளில்  அதிக ரன்கள் எடுத்தவர்கள்

829 – விவ் ரிச்சர்ட்ஸ் (1976)
774 – சுனில் கவாஸ்கர் (1971)
774 – ஸ்டீவ் ஸ்மித் (2019)
769 – ஸ்டீவ் ஸ்மித் (2014/15)

ஸ்டீவ் ஸ்மித் இந்த ஆஷஸ் தொடரின் குறைந்த ஸ்கோரான 23 ரன்களில் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். ஆஸ்திரேலியா 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிறது, தொடரை 2-2 என்று சமன் செய்யும் அபார வாய்ப்பை இனி இங்கிலாந்த் தவறவிட வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.கவாஸ்கர் சாதனையை காலி செய்த ஸ்டீவ் ஸ்மித்! அடுத்தடுத்து நொருக்கும் அசுரன்! 3

ஸ்டீவ் ஸ்மித் 2வது இன்னிங்சில் கடும் நெருக்கடியில் இறங்கினார். 4 பவுண்டரிகளுடன் 53 பந்துகளில் 23 என்று அவர் தன் வழக்கமான பாணியில் ஆடிவந்தார்.

இந்நிலையில் இன்னிங்சின் 27வது ஒவரை வீச வந்தார் பிராட். அதற்கு முன்பாக ஸ்மித்துக்கு பொறி வைக்க சங்கக்காரா கூறியது போல் ஒரு லெக் கல்லி, லெக் திசையில் டீப்பில் ஹூக் அல்லது புல்ஷாட்டுக்கு 2 பீல்டர்கள் என்று பொறிவைக்கப்பட்டது. சாதாரணமாக ஒரு பந்தை பிராட் ஃபுல் லெந்தில் வீச அதை லேசாக மட்டையினால் ஆன் திசையில் திருப்பி விட முயன்றார்.. லெக் கல்லியில் பென் ஸ்டோக்ஸ் இடது புறமாக டைவ் அடித்து அபார கேட்சைப் பிடித்தார். நல்ல வேளையாகப் பிடித்தார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *