ஸ்டீவ் ஸ்மித்தின் கேப்டன்சிக்கு சவால் – மைகேல் கிளார்க்

DHAKA, BANGLADESH - AUGUST 26: Steve Smith of Australia speaks to the media during a press conference prior to an Australian Test team nets session at Sher-E Bangla National Cricket Stadium on August 26, 2017 in Dhaka, Bangladesh. (Photo by Robert Cianflone/Getty Images)

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித்தின் கேப்டன் பதவி தற்போது சவாலுக்குள்ளாகியுள்ளது என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் ரிக்கி பாண்டிங். அதன்பிறகு மைக்கேல் கிளார்க் அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். முதுகு வலி பிரச்சினை காரணமாக அவரால் நீண்ட காலம் ஆஸ்திரேலிய அணியில் நீடிக்க முடியவில்லை.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை இழந்த பின்னர் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின் 2015-ம் ஆண்டு ஆஸ்திரேலியா- நியூசிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின்போது சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

கிளார்க்கிற்குப் பிறகு ஸ்டீவன் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். இவரது தலைமையிலான ஆஸ்திரேலியா இலங்கைக்கு எதிரான தொடரை 0-3 என இழந்தது. வங்காள தேசத்திற்கு எதிரான தொடரை 1-1 என சமன் செய்தது. இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 1-2 என இழந்திருந்தது.

தற்போது ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் தோல்வியடைந்துள்ளது. 2-வது போட்டி கொல்கத்தாவில் 21-ந்தேதி நடக்கிறது. இந்நிலையில் ஸ்மித்தின் கேப்டன் பதவி தற்போது சவாலுக்குள்ளாகியுள்ளது என முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் கிளார்க் கூறுகையில் ‘‘ஸ்மித்தின் பேட்டிங் நீண்ட நாட்களாக மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. ஆனால், அவருடைய கேப்டன் பதவி தற்போது சவாலுக்குள்ளாகியுள்ளது. அணியை வெற்றி பாதைக்கு எடுத்துச் செல்லுவது தேவையானது.

ஆஸ்திரேலியா அணி மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். கொல்கத்தாவில் நடைபெறும் 2-வது போட்டி தொடரை தீர்மானிக்கும் போட்டியாக இருக்கும் என நினைக்கிறேன்’’ என்றார்.

மேலும் அவர் இந்திய அணியின் விக்கெட்-கீப்பர் தோனியின் எதிர்காலத்தை பற்றியும் பேசினார். “2019 உலகக்கோப்பையில் தோனி விளையாடுவாரா என என்னிடம் கேட்காதீர்கள். அவர் 2023 உலகக்கோப்பை வரை விளையாடுவார்,” என மைகேல் கிளார்க் கூறினார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.