சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தும், பந்துவீச்சாளர்களில் பாட் கம்மின்ஸும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.

மான்செஸ்டரில் நடந்து முடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 4-வது டெஸ்ட் போட்டியின் போது, ஸ்மித்தின் 211 மற்றும் 82 ரன்கள் தரவரிசையில் மிகப்பெரிய உயர்வை அளித்துள்ளது.

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஸ்மித் விராட் கோலியைவிட 34 புள்ளிகள் அதிகம் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறார். டிசம்பர் 2017-ம் ஆண்டு ஸ்மித் எடுத்த 947 புள்ளிகளைப் பெறுவதற்கு இன்னும் 10 புள்ளிகள்தான் அவருக்குத் தேவைப்படுகிறது. இன்னும் ஒரு டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணி விளையாட உள்ளது.

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் இடத்தில் இருந்தார். ஓராண்டு தடைக்குப்பின் ஆஷஸ் தொடரில் களம் இறங்கிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்மித் முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசினார்.

இதனால் விராட் கோலியை நெருங்கினார் ஸ்மித். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் விராட் கோலி டக்அவுட் ஆக சறுக்கல் ஏற்பட்டது. ஒரு புள்ளி வித்தியாசத்தில் விராட் கோலியை (903) பின்னுக்குத் தள்ளி ஸ்மித் (904) முதல் இடம் பிடித்தார்.

இந்நிலையில் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் ஸ்மித் 211 மற்றும் 82 ரன்கள் அடிக்க ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்றார்.

தற்போது வெளியிட்டுள்ள தரவரிசையில் ஸ்மித் 937 புள்ளிகள் பெற்று விராட் கோலியை விட 34 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 903 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

பந்துவீச்சாளர்கள் வரிசையில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸ் ஆஷஸ் தொடரின் 4-வது ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் 914 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். 2001-ம் ஆண்டு முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மெக்ராத் எடுத்த புள்ளிகளுக்கு இணையாக கம்மின்ஸ் எடுத்துள்ளார்.

2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் ரபாடா 64 புள்ளிகள் பின்தங்கியுள்ளார். பும்ரா 835 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹேடல்வுடன் 12-வது இடத்தில் இருந்து 8-வது இடத்துக்கு உயர்ந்துள்ளார். ஹேசல்வுட் அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த தரவரிசை இதுவாகும்.

இதுதவிர இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் 4 இடங்கள் முன்னேறி 37-வது இடத்திலும், ரோரி பர்ன்ஸ் 6 இடங்கள் உயர்ந்து 61-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் 6 இடங்கள் முன்னேறி 60-வது இடத்திலும் உள்ளனர்.

சட்டோகிராம் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்தை 224 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வென்றது. இதில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்கர் ஆப்கன் இரு அரை சதங்கள் அடித்ததால், தரவரிசையில் 110-வது இடத்தில் இருந்து 63-வது இடத்துக்கு உயர்ந்தார். சதம் அடித்த ரஹமத் ஷா 93-வது இடத்தில் இருந்து 65-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

கேப்டன் ரஷித் கான் இரு இன்னிங்ஸிலும் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் தரவரிசையில் 69-வது இடத்தில் இருந்து 37-வது இடத்துக்கும், முகமது நபி 85-வது இடத்துக்கும் முன்னேறியுள்ளனர். • SHARE

  விவரம் காண

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் !!

  கேப்டன் பதவியில் இருந்து அவரை நீக்குங்கள்; போர்க்கொடி தூக்கும் முன்னாள் கேப்டன் மூன்று வகை பாகிஸ்தான் அணிக்கும் சர்பராஸ் அகமது கேப்டனாக இருந்து வருகிறார்....

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் !!

  அத பத்தி எல்லாம் நான் கவலைப்படவில்லை; குல்தீப் யாதவ் ஓபன் டாக் இந்திய டி.20 அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து தான் பெரிதாக கவலை...

  இந்திய அணியின் உடையில் ராகுல் டிராவிட்: உண்மையான காரணம் இதுதான்!

  இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி பெறும் இடத்துக்கு இன்று சென்ற தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் ராகுல் டிராவிட், பயிற்சியாளர் ரவி சாஸ்திரியுடன்...

  தோனிக்கெல்லாம் காலம் முடிஞ்சு போச்சு, கெளம்ப சொல்லுங்க! பெரிய இடத்தில் கை வைத்த சுனில் கவாஸ்கர்

  இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு அடுத்து இருக்கும் ரிஷப் பந்தை நாம் வளர்க்க வேண்டும்...

  ரிஷப் பன்ட்டை தூக்கிவிட்டு இவரை களமிறக்குங்கள்; கவாஸ்கர் காட்டம்

  ரிஷப் பந்த் தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளத் தவறும்பட்சத்தில் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்ஸனைத் தேர்வு செய்யலாம் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இந்திய...