2016ஆம் ஆண்டில் நடந்த ஷெப்பில்டு ஷீல்டு போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்தியதால் போட்டியின் நடுவர் இருவருக்கும் கண்டனம் கொடுத்ததாக தகவல் வந்துள்ளது.
ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரை கேப்டன் மற்றும் துணைகேப்டன் பதவியில் இருந்து தூக்கிய பிறகு தான் இந்த செய்தி வெளியே வந்தது. மேலும், பந்தை சேதப்படுத்தியதால் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னரை 1 வருடத்திற்கு கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்.
நவம்பர் 2016ஆம் ஆண்டு விக்டோரியா அணிக்கு எதிராக விளையாடும் போது நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக இருவரும் விளையாடிய போது பந்தை சேத படுத்தியதாக அந்த போட்டியின் நடுவர் டரில் ஹார்பர் தெரிவித்திருந்தார். அந்த செய்தியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் நடுவர் மற்றும் சைமன் டப்பலுக்கும் ஈமெயில் மூலம் அவர் தெரிவித்திருந்தார்.
“முதல் நாள் ஆட்டத்தின் போது அதை பற்றி தொடர்ந்து விக்கெட் கீப்பர் பீட்டர் நெவிலிடம் கூறி கொண்டிருந்தார். இதை பற்றி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திடம் அப்பீல் செய்தேன். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ள வில்லை. இதனால், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பந்தை சேதப்படுத்திய பிரச்சனையில் சிக்க கூடாது என தலைமை பயிற்சியாளரிடம் கூறினேன்,” என போட்டியின் நடுவர் ஒரு செய்தித்தாளுக்கு பேட்டி அளித்திருந்தார்.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் தோல்வி பெற்ற பிறகு மைதானத்தின் மீது ஸ்டீவ் ஸ்மித் புகார் அளித்ததாகவும் ஹார்பர் கூறினார். அந்த போட்டியிலும் தென்னாபிரிக்கா அணியின் கேப்டனாக பாப் டு பிளெஸ்ஸிஸ் தான் இருந்தார்.
சமீபத்தில் நடந்த பிரச்சனை பற்றி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விசாரிக்கப்போவதாக கூறியுள்ளது. ஆஸ்திரேலியாவிற்கு சென்ற பிறகு ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கேமரூன் பென்க்ராப்ட் ஆகியோர் இந்த சம்பவத்தை பற்றி பேசினார்கள். ஆஸ்திரேலிய அணியின் தொடக்கவீரர் டேவிட் வார்னர் சனிக்கிழமை அன்று இந்த பிரச்சனை பற்றி பேசுவார் என்று கூறப்படுகிறது.