தென் ஆப்ரிக்காவை சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்; ஸ்டீவ் ஸ்மித் !!

தென் ஆப்ரிக்காவை சமாளிக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்; ஸ்டீவ் ஸ்மித்

தென் ஆப்ரிக்காவிற்கு எதிரான தொடர் நிச்சயம் கடும் சவாலாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தென் ஆப்ரிக்கா அணி வெற்றி தொடரை கைப்பற்றிய நிலையில், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மட்டும் இந்திய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இரு அணிகள் இடையேயான ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் பிப்ரவரி 1ம் தேதி துவங்க உள்ளது. அதனை தொடர்ந்து இரு அணிகள் இடையேயான மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது.

இந்திய அணியுடனான தொடர் நிறைவடைந்து பிறகு தென் ஆப்ரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்காவுடனான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் “தென் ஆப்ரிக்கா அணியுடனான தொடர் எங்களுக்கு கடும் சவாலை கொடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்மித் கூறியதாவது “அதன் சொந்த மண்ணிலேயே தென் ஆப்ரிக்காவை வீழ்த்துவது அவ்வளவு எளிதானது அல்ல. அதற்காக நாங்கள் கடுமையாக போராடிய வேண்டும். வேகப்பந்து வீச்சில் முழு பலம் பெற்றுள்ள தென் ஆப்ரிக்கா அணியை சமாளிப்பதில் எங்கள் பேட்ஸ்மன்களுக்கு சிரமம் ஏற்படும், இருந்தாலும் நாங்கள் எங்களால் முடிந்த வரை போராடி தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றியுடன் திரும்புவோம்” என்று தெரிவித்துள்ளார்.

 

Mohamed:

This website uses cookies.