பில் ஹக்சின் மூன்றாவது வருட இறந்த நாள் அன்று அஞ்சலி செலுத்தும் ஸ்டீவ் ஸ்மித்

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பில் ஹக்ஸ், ஒரு பவுன்சரால் தலையின் பின்புறம் அடி பட்டு நம்மை விட்டு பிரிந்து மூன்று வருடத்திற்கு ஆகிறது.

நியூ சவுத் வேல்ஸ் அணிக்கு எதிராக சவுத் ஆஸ்திரேலிய அணிக்காக பில் ஹக்ஸ் விளையாடி கொண்டிருக்கும் போது வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்பாட் வீசிய பந்து அவரின் கழுத்து மேல் பட்டதும், அவர் மயக்கம் போட்டு அப்படியே கீழே விழுந்தார். அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றார்கள், ஆனால் கடைசியில் அவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பில் ஹக்ஸ் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். இன்று பில் ஹக்ஸ் நம்மை விட்டு பிரிந்து சரியாக மூன்று வருடம் ஆகிறது, இந்நிலையில் நம்மை விட்டு பிரிந்த பில் ஹக்ஸுக்கு அஞ்சலி செலுத்தினார் ஸ்டீவ் ஸ்மித்.

பில் ஹக்ஸ் சிரித்து கொண்டிருக்கும் போட்டோவை எடுத்து ‘மூன்று வருடங்கள் சென்றது, நான் இன்னும் உன்னை மிஸ் செய்கிறேன்,” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டீவ் ஸ்மித் பதிவிட்டார்.

இன்று பில் ஹக்ஸ் நம்மை விட்டு பிரிந்து சரியாக மூன்று வருடம் ஆகிறது, இந்நிலையில் நம்மை விட்டு பிரிந்த பில் ஹக்ஸுக்கு அனைத்து கிரிக்கெட் வீரர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

கிரிக்கெட்டில் பல சாதனைகளை படைப்பதற்கு முன்பே நம்மை விட்டு பிரிந்து விட்டார் பில் ஹக்ஸ். 2009 ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணியுடன் தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சிலும் சதம் அடித்து அசத்தினார் பில் ஹக்ஸ். ஆஸ்திரேலிய அணிக்காக 26 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடி உள்ள அவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 5 சதம் மற்றும் 11 அரைசதங்களுடன் 2000 ரன்னுக்கும் மேல் அவர் அடித்துள்ளார்.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.