19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் உலகக்கோப்பையில் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக்கின் மகன், தற்போதைய தலைமை நிர்வாகி சதர்லேண்டு மகன் விளையாடுகிறார்கள்.
ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் வாக் மகன் நியூசிலாந்தில் அடுத்த மாதம் 13-ந்தேதி முதல் பிப்ரவரி 3-ந்தேதி வரை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதற்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டது.
இதில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாக்கின் மகனும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தற்போதைய தலைமை நிர்வாகியாக இருக்கும் ஜேம்ஸ் சதர்லேண்டின் மகன் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
ஆஷஸ் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த இளம் வீரர் சங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்துக்கு எதிராக 133 ரன்கள் குவித்தார்.
நியூஸிலாந்தில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 3 வரை 19 வயதுக்குட்பட்ட ஜூனியர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது.
இதற்கு முன்பு இலங்கைக்கு எதிரான ஆஸ்திரேலிய ஜூனியர் அணியில் இடம்பிடித்த ஆஸ்டின் தற்போது உலகக் கோப்பை அணியிலும் இடம்பிடித்துள்ளார். ஆல்ரவுண்டரான ஆஸ்டின், பெளலிங்கில் வேகப்பந்துவீச்சாளராக உள்ளார். ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ரையன் ஹாரிஸ் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 14 அன்று நடைபெற்றவுள்ள போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை எதிர்கொள்கிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற 17 வயதிற்கு உட்பட்டோருக்கான தேசிய சாம்பியன்ஷிப் தொடரில் ஸ்டீவ் வாக்கின் மகன் ஆஸ்டின் வாக் சதம் அடித்திருந்தார்.
U-19 ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஜேசன் சங்கா (கேப்டன்), 2. வில் சதர்லேண்டு (துணை கேப்டன்), 3. சேவியர் பார்ட்லெட், 4. மேக்ஸ் பிரையன்ட், 5. ஜேக் எட்வர்ட்ஸ், 6. எவான்ஸ், 7. ஜெரார்டு ப்ரீமேன், 8. ரியான் ஹாட்லி, 9. பாக்ஸ்டெர் ஹால்ட், 10. மெக்ஸ்வீனேய், 11. ஜோனாதன் மெர்லோ, 12. லாய்டு போப், 13. ஜேசன் ரால்ஸ்டன், 14. பரம் உப்பல், 15. ஆஸ்டின் வாக்.