இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்குள் வந்தார் டேல் ஸ்டெய்ன்!! 1

வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தென்ஆப்பிரிக்காவின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் டேல் ஸ்டெயின். கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஓய்வில் இருந்தார்.

இந்த வருடம் தொடக்கத்தில் இந்தியாவிற்கு எதிரான தொடரில் களம் இறங்கினார். ஆனால் காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. சமீபத்தில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடும்போதும் கூட காயத்தில் அவதிப்பட்டார்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்குள் வந்தார் டேல் ஸ்டெய்ன்!! 2

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா ஜிம்பாப்வேயிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டேல் ஸ்டெயின் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் சுமார் இரண்டு வருடத்திற்குப் பிறகு ஒருநாள் அணியில் விளையாடுகிறார்.

ஒருநாள் அணி: கிறிஸ்டியன் ஜான்கெர், ஹென்ரிச் க்ளாசென் (கீ), கேசவ் மஹாராஜ், ஐடன் மார்கரம், வியான் முல்டர், லுங்கி நிக்கிடி, ஆண்டில் பெஹல்குவே, கிகிஸோ ரபாடா , தாபிராய் ஷம்ஸி, டேல் ஸ்டெயின், கயா ஸோண்டோ.

டி20 அணி: ஜுன் டூனி, ராபி ஃப்ரைலிங்க், இம்ரான் தாஹிர், ஜான்கெர், க்ளாசென் (கீ), டேவிட் மில்லர், நிக்டி, டேன் பீட்டர்சன், பெஹில்குவேவ், ஷாம்சி, டான் பிளெர்சிஸ், ஜீனன் கிளாட், ரஸ்ஸி வான் டெர் டஸன்.

  1.  முதல் ஒரு நாள் சர்வதேச, கிம்பர்லி – செப்.30
  2.  ஒருநாள் சர்வதேச சர்வதேச, பிளோம்ஃபோன்டைன் – அக்.3
  3.  மூன்றாவது ஒரு நாள் சர்வதேச, பாரி – அக்.6
  4.  முதல் டி20 சர்வதேச, கிழக்கு லண்டன் – அக்.9
  5.  இரண்டாவது டி20 சர்வதேச, பொட்டெஸ்ட்ரூம் – அக்.12
  6.  மூன்றாவது டி20 சர்வதேச, பெனோனிவ் – அக்.14

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனைப் படைத்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன் மெக்ராத் மற்றும் டேல் ஸ்டெயின் என்னைவிட சிறந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்குள் வந்தார் டேல் ஸ்டெய்ன்!! 3

இங்கிலாந்து – இந்தியா இடையிலான கடைசி டெஸ்டில் இந்தியாவின் கடைசி விக்கெட்டாக முகமது ஷமியை வீழ்த்தியன் மூலம் ஜேம்ஸ் ஆண்டர்சன் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி 564 விக்கெட்டுக்களுடன் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

564 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 விக்கெட்டுக்கள் வீழ்த்துவார் என்று மெக்ராத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் என்னைவிட மெக்ராத் மற்றும் தென்ஆப்பிரிக்காவின் டெல் ஸ்டெயின் ஆகியோர் சிறந்த பந்து வீச்சாளர்கள் என்று ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறுகையில் ‘‘நான் மெக்ராத்தை பற்றி சில விஷயங்களை உங்களுக்கு சொல்லியாக வேண்டும். அவர் என்னைவிட சிறந்த பந்து வீச்சாளர். இது தவறான தன்னடக்கம் இல்லை’’ என்றார்.

இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் அணிக்குள் வந்தார் டேல் ஸ்டெய்ன்!! 4

டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கை சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவர் 800 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அவரை அடுத்து ஷேன் வார்னே 708, கும்ளே 619 விக்கெட்களுடன் முதல் மூன்று இடங்களில் உள்ளனர். 564 விக்கெட்களுடன் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 563 விக்கெட்களுடன் மெக்ராத் 5வது இடத்தில் உள்ளார்.

அதிக விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்தது குறித்து ஆண்டர்சன் கூறுகையில், “நான் அழாமல் இருக்க முயற்சிக்கிறேன். எனக்கு இது மிகவும் சிறப்பு வாந்த சாதனை. இதுநான் இதுவரை செய்திராத ஒன்று. இங்கிலாந்து அணிக்காக மகிழ்ச்சியுடன் நான் விளையாடுகிறேன். அது ஒரு அற்புதமான பணி” என்றார்.

Rajeshwaran Naveen

Cricket Fan - Dhoni Lover - CSK Forever

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *